பாட்னர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாட்னர்'.இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பாட்னர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார். இந்நிலையில் பாட்னர் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com