என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீனா ரவி"

    • அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பொது அறிவிப்பு.

    தமிழ் திரையுலகில் டப்பிங் மற்றும் நடிப்பு என பன்முகத்தன்மை கொண்டவர் ரவீனா. சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படங்களில் ரவீனா தனது நடிப்பு மற்றும் பின்னணி குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ரவீனா தான் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

    "கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை, எனது குடும்பத்தினரை மற்றும் நண்பர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து வரும் ஒரு நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பொது அறிவிப்பு இது.

    இந்த தொந்தரவு தொடர்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்து காவல் துறையில் புகார் அளித்து, எச்சரிக்கைகள் வழங்கப்பட்டாலும், "சபரிஷ்" என்ற நபரும் அவரது இரட்டையர் சகோதரரும் தொடர்ந்து என்னை மட்டுமின்றி, எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஆன்லைனில் துன்புறுத்தி வருகிறார்.

    அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் மற்றும் கருத்துகளில் மிகவும் அருவருப்பான, அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தாக்குதல் என்னை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது.

    "என் காரணமாக என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,"

    சட்டபூர்வமான வழிகளின் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்ற போதிலும், இந்த தொந்தரவு இன்னும் நிறுத்தப்படவில்லை. அந்த நபர் பல்வேறு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி, என்னை மட்டுமின்றி பிற பெண் நடிகைகள் மற்றும் தொழில்முறை கலைஞர்களையும் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்.

    மேலும், "ஏற்கனவே சந்தித்தோம்", "திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது" போன்ற கற்பனைக் கதைகளை உருவாக்கி, பெண்களை மனதளவில் அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறார்.

    இந்த நிலையில், இனி மௌனம் காக்க முடியாது என்பதால், இந்த பிரச்சினையை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பொதுமக்கள் பின்வரும் நடவடிக்கைகளை செய்ய வேண்டுகிறேன்:

    * அந்த நபரின் மற்றும் அவரது சகோதரரின் சமூக வலைதள கணக்குகளை **Block** செய்து **Report** செய்ய வேண்டும்.

    * அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவல்கள் அல்லது செய்திகள் வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    * அவர்களின் கருத்துகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.

    "பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை அழைக்கப்படுகிறது. அனைவருக்கும் இந்த நகரம் உண்மையில் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தப் பதிவை நடிகை ரவீனா முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை காவல் துறை, சைபர் பிரிவு மற்றும் இதர அமைப்புகளை டேக் செய்துள்ளார். 



    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘லவ் டுடே’.
    • இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


    லவ் டுடே

    இதையடுத்து 'லவ் டுடே' பட நடிகை ரவீனா ரவி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'லவ் டுடே' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "நீங்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணினால் நன்றாக இருக்கும் என்று பிரதீப் என்னிடம் கேட்டுக் கொண்டார். நம்புங்க நம்பி பண்ணுங்க அப்படினு சொன்னார். நான் என்கிட்ட மட்டும் தான் இப்படி சொன்னார் என்று நினைத்தேன்.


    ரவீனா ரவி

    ஆனால், அவரோட பர்சனல் வாழ்க்கையில் எல்லாரிடம் இவ்வாறு சொல்லியிருக்கார். இந்த படத்தில் எல்லாவற்றையும் காட்டியிருந்தார். யோகி பாபு சாருடனான என்னுடைய காட்சிகள் மக்கள் மனதில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என்று நினைத்தேன் அது மாதிரி தான் நடந்தது. மனச பாத்து லவ் பண்றவங்களும் இருக்காங்க சில பேருக்கு புரியும் தோற்றம் சில காலம் தான் இருக்கும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கபோவது கிடையாது" என்று பல விஷயங்கள் பற்றி கூறினார்.




    • மாரி செல்வராஜ் இயக்கியிருந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தில் ரவீனா ரவி, ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



    மாமன்னன் திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியையும், கதாபாத்திரங்களையும் பாராட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாமன்னன் படத்தில் ரத்னவேலுவாக நடித்த ஃபகத் பாசிலின் மனைவியாக ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ரவினா ரவி அந்த பாத்திரம் குறித்து நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

    அதில், "இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.



    • 'வட்டார வழக்கு' திரைப்படம் டிசம்பர் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • வட்டார கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வட்டார வழக்கு' . மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்ஷன்ஸ் கே.கந்தசாமி மற்றும் கே. கணேசன் வழங்கும் இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்துள்ளனர். 'வட்டார வழக்கு' திரைப்படம் டிசம்பர் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    வட்டார கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு மூடர் கூடம் டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன் ஒளிப்பதிவு மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை வெங்கட்ராஜன் செய்திருக்கிறார்.இந்த படத்தில் தமிழ் சினிமா காணாத காதல் காட்சிகள் போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல், காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த புதுவிதமான காதல் உணர்வை காட்டும் வெளிப்படுத்தும் வகையில், இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகை ரவீனா ரவி பேசியதாவது, "2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மீடியா நல்ல விமர்சனம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படப்பிடிப்பு நடத்திய ஊரில் உள்ள கிராமத்து மக்களும் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லோரும் ரிஸ்க் எடுத்து தான் நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று பேசினார்.


    நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் பேசியதாவது, இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி அவர் பெயரை சொல்வதற்கு கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அவரது இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது.  இயக்குனர், ரவீனா எனப் படக்குழுவினர் அனைவருமே சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர்.


    இப்போது எல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள் என்றார்.

    ×