என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிரபு தேவாவின் 'வுல்ஃப்' திரைப்படத்தை வினு வெங்கடேஷ் இயக்குகிறார்.
    • இப்படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் தற்போது 'வுல்ஃப்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.





    • இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜாக்சன் துரை 2’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்நிலையில், 'ஜாக்சன் துரை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சத்யராஜ் மாஸாக கண்ணாடி அணிந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • ஹரிஷ் கல்யாண்-இவனா நடிப்பில் ஜூன் 28ம் தேதி தமிழில் வெளியான படம் ‘எல்.ஜி.எம்’.
    • இப்படத்தின் தெலுங்கு வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.

    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருந்தார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இப்படம் ஜூன் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.



    இந்நிலையில் எல்ஜிஎம் படத்தின் தெலுங்கு வெளியிட்டு தேதிஐ படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி எல்.ஜி.எம் திரைப்படம் தெலுங்கில் நாளை ஆகஸ்ட் 04ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • ரஜினியின் ‘ஜெயிலர்’ஷோகேஸ் வீடியோ நேற்று மாலை வெளியானது.
    • இந்த ஷோகேஸ் வீடியோ யூடியூபில் முதல் இடம் பிடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.



    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோவை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் வீடியோ யூடியூபில் முதல் இடம் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.



    • ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி.
    • நடிகை டாப்ஸி தற்போது கே-13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ஜீவாவின் வந்தான் வென்றான், அஜித் குமாரின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து அனபெல் சேதுபதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் டாப்ஸி தற்போது நடித்து வரும் தமிழ் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அருள்நிதி-ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான கே-13 படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் டாப்ஸி நடித்து வருவதாகவும் இப்படத்திற்கு ஏலியன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • மாரி செல்வராஜ் இயக்கியிருந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



    இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். மாமன்னன் திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலு பாடும் பாடல் ஒன்றை பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான். நன்றி வடிவேலு சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    'மாமன்னன்' திரைப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



    • ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்பட டிரைலர் நேற்று மாலை வெளியானது.
    • இந்த டிரைலர் குறித்து இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.




    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டிரைலரை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாவ், தலைவா ஒவ்வொரு நொடியும் புல்லரிக்கிறது. ஜெயிலர் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். தலைவரின் தரிசனத்திற்காக தலைவர் தரிசனத்திற்காக காத்திருக்க முடியாவில்லை. ஆகஸ்ட் 10ம் தேதி விரைவாக வந்திடு என்று பதிவிட்டுள்ளார்.

    கார்த்திக் சுப்பராஜ், ரஜினியின் பேட்ட திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.



    • மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தை பாராட்டி பிரபலங்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    சிவகுமார் பதிவு

    இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். மாமன்னன் திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.


    மாமன்னன் போஸ்டர்

    இந்நிலையில், நடிகர் சிவகுமார் இப்படத்தை புகழ்ந்து பகிர்ந்துள்ளார். அதில், தம்பி மாரி செல்வராஜுக்கு! மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி. பாதிக்கப்பட்டவன்தான் இவ்வளவு ஆழமாகச் சொல்ல முடியும். திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளது. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    'மாமன்னன்' திரைப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ப்ரோ’.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஆளுங்கட்சியினர் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திராவில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் நடித்த ப்ரோ படம் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியை சேர்ந்த அமைச்சர் அப்பத்திரம் பாபுவை கிண்டல் அடிப்பது போல காட்சி இடம் பெற்றுள்ளது.

    நகைச்சுவை நடிகர் ப்ருத்விராஜ், அமைச்சரைப் போன்ற உடை அணிந்து சாலையில் நடனமாடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது ஆளுங்கட்சியினர் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு கூறியதாவது:-

    "நடிகர்களாக மாறிய அரசியல்வாதிகள் என்.டி.ராமராவ் அல்லது சிரஞ்சீவி அரசியலில் தீவிரமாக இருந்தபோது திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால், பவன் கல்யாண் திரைப்படம் மற்றும் அரசியல் இரண்டையும் விரும்பி, இரு துறைகளுக்கும் அநீதி இழைத்து வருகிறார்".

    பவன் கல்யாண் என்னை அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாததால், என்னைக் கொச்சைப்படுத்த ஷியாம்பாபு என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். என்னோட கேரக்டருக்கு 'ராம்பாபு' என்று பெயர் வைத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. யாரையாவது குறிவைத்து படம் எடுத்தால் வெற்றியடையாது என்பதை படக்குழுவினர் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா.
    • இவர் தன் பேச்சால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

    ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வரும் ராம் கோபால் வர்மா தன் பேச்சால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

    சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவர் இனிமேல் இந்தி படங்கள் வெற்றி பெறாது என்ற கண்ணோட்டத்தை 'பதான்' மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


    ராம் கோபால் வர்மா

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், " பாலிவுட் படங்கள் இனி ஓடாது என்ற கண்ணோட்டத்தை 'பதான்' திரைப்படம் மாற்றியமைத்தது. 'காந்தாரா', 'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎப்' படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது.

    பொருட்களுக்கு லேபிள் இடும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது. ஒருவேளை ராஜமவுலி ஒடிசாவிலோ, குஜராத்திலோ பிறந்ததிருந்தால் அவர் இந்த மாதிரியான படங்களைத் தான் இயக்கியிருப்பார். நான் தற்போது அரசியல் த்ரில்லர் படம் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் இந்தி படம் ஒன்றை இயக்குவேன்" என்று கூறினார்.

    • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி -2'.
    • இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.


    டிமான்ட்டி காலனி 2 போஸ்டர்

    இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 5.01-க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

    'டிமான்ட்டி காலனி -2' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.





    ×