என் மலர்
சினிமா செய்திகள்

இணையத்தில் ட்ரெண்டாகும் பிரபுதேவாவின் 'வுல்ஃப்' டீசர்
- பிரபு தேவாவின் 'வுல்ஃப்' திரைப்படத்தை வினு வெங்கடேஷ் இயக்குகிறார்.
- இப்படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் தற்போது 'வுல்ஃப்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Next Story






