டாப்ஸி படத்தின் புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி.நடிகை டாப்ஸி தற்போது கே-13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
டாப்ஸி படத்தின் புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Published on

நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ஜீவாவின் வந்தான் வென்றான், அஜித் குமாரின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து அனபெல் சேதுபதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் டாப்ஸி தற்போது நடித்து வரும் தமிழ் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அருள்நிதி-ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான கே-13 படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் டாப்ஸி நடித்து வருவதாகவும் இப்படத்திற்கு ஏலியன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com