என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார்.
- இவர் தற்போது மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். அதன்பின்னர் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அமர்களம், முகவரி, தீனா, பில்லா, என்னை அறிந்தால், வீரம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தார். சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். அவ்வப்போது உலகம் முழுவதும் பைக் பயணம் செல்லும் அஜித், தற்போது மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். அஜித்தின் பைக் பயணித்தின் போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்டாலின் ஐ.பி.எஸ் பகிர்ந்த புகைப்படம்
இந்நிலையில், அஜித்தின் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஸ்டாலின் ஐ.பி.எஸ் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அந்த பதிவில், "பைக்கில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள்...தலைக்கவசம் உயிர்க்கவசம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஜிவி பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ள படம் ‘டியர்’.
- இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'டியர்'. இப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டியர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் படக்குழு தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- நிதின் தேசாய் பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
- இவர் மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
'தேவதாஸ்', 'ஜோதா அக்பர்' மற்றும் 'லகான்' உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் நிதின் தேசாய் (வயது 57). இவர் கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார். இவர் கடந்த ஆண்டில் சந்திரகாந்த் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தேஷ் தேவி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளாராக உருவெடுத்தார்.

இதையடுத்து நிதின் தேசாய் மும்பையில் உள்ள அவரது என். டி. ஸ்டுடியோவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். பல்வேறு படங்களில் தன் கலை திறமையை வெளிப்படுத்தியுள்ள நிதின் தேசாய் மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நிதின் தேசாய் கடன் பிரச்னையில் சிக்கி இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவரது என். டி. ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டதால் அவர் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- யுவன் சங்கர் ராஜா சில தினங்களுக்கு முன்பு, நான் எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
- இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரை பதிவிட்டு வந்தனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா, நந்தா, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையில் சமீபத்தில் வெளியான கஸ்டடி மற்றும் பொம்மை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில், எனது அடுத்த பெரிய பாடலுக்கு நான் எந்த இசை அமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பெயரை கீழே பதிவிடுங்கள், அதைச் செய்வோம்! என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரின் பெயர்களை பதிவிட்டு வந்தனர். மேலும் பலரும் அனிருத் என்று தங்களின் விருப்பத்தை பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, அவர்களின் விருப்பத்திற்கு இனங்க அனிருத்துடன் இணையவுள்ளதாக வித்யாசமான முறையில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹர்காரா’.
- இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகில் மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது.
'வி 1 மர்டர் கேஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஹர்காரா'. தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்கு செல்லும் போஸ்ட்மேன் அங்கு படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும் பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கவுதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகில் மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது.

ஹர்காரா போஸ்டர்
கலர்புல் பீட்டா மோமண்ட் (KALORFUL BETA MOVEMENT) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ராம் சங்கர் இசையமைத்துள்ளார். மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள "ஹர்காரா" திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது. ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு வருகிற 6ம் தேதி தொடங்கவுள்ளது.

ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 600 முதல் 700 திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை என்றும் முதல் காட்சி காலை 9 மணிக்கே தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான விடுதலை, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், மாவீரன் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.
மலையாளத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்து வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஓசானா', மற்றும் 'ஒரு முத்தஸி கதா', 'சாராஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப். இவர் தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.

விக்ரம்- ராஷ்மிகா- ஜூட் ஆந்தனி ஜோசப்
இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கும் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'.
- இப்படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் பாட்னர் படத்தில் இடம்பெற்றுள்ள ராட்டி என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் 5 வருடத்திற்கு முன்பு 7அப் மெட்ராஸ் ஆல்பத்திற்காக சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மோகன் (வயது 60).
- இவர் இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மோகன் (வயது 60). பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். காலப் போக்கில் மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் யாசகம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் இறந்த மோகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மோகனுக்கு 2 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இலவச ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அனுப்பி வைக்கப்பட்டது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- சசிகுமார் இயக்கத்தில் வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் 15 ஆண்டுகளை பிறகு மீண்டும் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் சசிகுமார் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'சுப்ரமணியபுரம்' படத்தின் புதிய வெர்ஷன் டிரைலரை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
- அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார்.
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். அதன்பின்னர் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அமர்களம், முகவரி, தீனா, பில்லா, என்னை அறிந்தால், வீரம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தார். சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அவ்வப்போது உலகம் முழுவதும் பைக் பயணம் செல்லும் அஜித், தற்போது மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். அஜித்தின் பைக் பயணித்தின் போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘காக்க காக்க’.
- இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனது குறித்து சூர்யா பதிவிட்டுள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான படம் 'காக்க காக்க'. இதில் ஜீவன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் திருப்புமுனை படமாக மாறியிருந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள், வசனங்கள், கதாப்பாத்திரம் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், "எனக்கு அனைத்தும் கொடுத்த படம் இது. அன்புச்செல்வன் கதாப்பத்திரம் எப்பொழுதும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஜோதிகா தான் இந்தப் படம் குறித்து என்னிடம் முதலில் பேசி இருந்தார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சக நடிகர்கள் மற்றும் உடன் பணியாற்றிய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இப்படத்தில் நல்ல பல நினைவுகள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.






