என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை கஸ்தூரி அவ்வப்போது இணையத்தில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
    • அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. 'ஆத்தா உன் கோயிலிலே' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சின்னவர், புதிய முகம், அமைதிப்படை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார்.


    சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை கஸ்தூரி ஒரு சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடினார். இவரின் நடனத்திற்கு பலரும் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பு வளையத்துக்குள் இருந்து வருகிறார். அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.


    இந்நிலையில், இவர் நடிகர் அஜித் குறித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு... அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
    • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார்.

    இதையடுத்து 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் செப்டம்பர் 10-ந்தேதி நடைபெறும் என்றும் முன்னதாக பெற்ற டிக்கெட்டுக்களை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
    • தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    எச். வினோத் இயக்கத்தில் வெளியான 'துணிவு' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதே போன்று நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், நடிகர்கள் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் உறுதியானால் தன் வாழ்க்கை வேறு மாதிரி மாறிவிடும் என பரத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார்.


    இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    வைரலாகும் புகைப்படம்

    இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக BMW 7 சீரிஸ் கார் வாங்கியுள்ளதாகவும் இதன் விலை ரூ.1.70 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ’ஜெயிலர்’ திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • இப்படம் ஒரு வாரத்தில் ரூ.375. 40 கோடியை வசூலித்தது.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


    'ஜெயிலர்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் வசந்த் ரவி கூறியதாவது, நான் நடித்த மூன்று படங்கள் தாண்டி 'ஜெயிலர்' என் வாழ்க்கையின் மையில்கல். ரஜினியுடன் ஒரு காட்யிலாவது நடித்து விட மாட்டோமா என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு. அந்த கனவு எனக்கு நிறைவேறியுள்ளது. அதற்கு ரஜினி சாருக்கு ரொம்ப நன்றி.



    படப்பிடிப்பில் ரஜினி சாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். படம் முடியும் போது எனக்கு மிகவும் எமோஷனலாக இருந்தது. அப்போது ரஜினி சாரின் உங்களுடன் நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கூறினேன். அதற்கு ரஜினி சார் கண்டிப்பாக நிச்சயம் இன்னொரு படம் பண்ணுவோம் என்று கூறினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.
    • இவர் தற்போது இந்தியன்- 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் பிரமாண்ட இயக்குனராக வலம் வருகிறார். தன் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு இடத்தில் பிரமாண்டத்தை புகுத்தி 90-களில் இருந்து தற்போது வரை ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவரின் முதல் படமான 'ஜென்டில்மேன்' திரைப்படத்திலேயே 2டி அனிமேஷன் போன்றவற்றை பயன்படுத்தி தனக்கான இடத்தை உருவாக்கினார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.


    இயக்குனர் ஷங்கர் தற்போது கமல் நடிப்பில் 'இந்தியன் -2' திரைப்படத்தை இயக்கி வருகிறார். 27 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.


    ஷங்கரின் 60-வது பிறந்த நாளையொட்டி திரைப்பிரபலங்கள் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஷங்கர் 'இந்தியன் -2' படக்குழுவினருடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • அதர்வா- மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மத்தகம்’.
    • இந்த வெப்தொடர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில்

    இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மத்தகம்'. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இதன் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப்தொடருக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெப்தொடர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில் 'மத்தகம்' வெப் தொடர் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் அதர்வா பேசியதாவது, "மத்தகம் இப்ப ரிலீஸாகுது, ஆனா இது 2018, 2019-ஆம் ஆண்டு ஆரம்பிச்சது. கவுதம் மேனன் சார் தான் இயக்குனர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப வரக்காரணம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தான், அவங்களுக்கு ரொம்ப நன்றி.


    பிரசாத் சார் இந்த கதையை குயினுக்கு முன்னாடியே எழுதிட்டார். மத்தகம் கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு. முழுக்க நைட்ல தான் ஷூட் பண்ணோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவனா தெரிய மாட்டேனானு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில் பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேட்குறாங்க. அவர் கூட 2 நாள் தான் ஷூட் அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர் அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம்" என்று பேசினார்.

    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


    ஜெயிலர் போஸ்டர்

    மேலும், 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.




    • நடிகர் ரஜினி சமீபத்தில் இமயமலைக்கு சென்றிருந்தார்.
    • இவர் பயணம் நேற்றுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிக ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.


    சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். இவரின் இமயமலை பயணம் நேற்றுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் ரஜினி, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    • விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’.
    • இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.


    'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் 'குஷி' படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர். 'குஷி' படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியதாவது, "செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று உங்களுக்கு 'குஷி'யாக இருக்க வாழ்த்துகள். கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் பணிகள் குறித்து இயக்குனர் சிவாவிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். ஒவ்வொரு முறையும் அவர் என்னிடம் அதையே சொல்கிறார், ''செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை நான் பார்க்க வேண்டும் விஜய் தேவரகொண்டா சகோதரரே''. அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்கிறார். சிவாவுக்கு என் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை என் முகத்தில் பார்க்காமல்.. சமந்தாவின் முகத்தில் பார்க்க வேண்டும்.


    இந்தப் படத்திற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம் படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்கினோம். முக்கிய பகுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜூலையில் 35 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த போது, 'தனக்கு உடல்நிலை சரியில்லை' என்று சமந்தா கூறினார். முதலில் மூன்று நாள் நீடிக்கும் என நினைத்தேன். பிறகு இரண்டு வாரங்களாகும் என்று நினைத்தோம். ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மற்றொரு திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் நான் கலந்து கொண்டிருந்த போதுதான் அவரது உடல்நிலை குறித்து அறிந்தேன். ஏனென்றால் கலைஞர்களாகிய நாம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும். எங்கள் துயரங்களை சொல்ல விரும்பவில்லை. சமந்தா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.


    அவர் மிகவும் போராடினார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் சமந்தா தனது உடல்நிலை குறித்து பேச முன்வந்தார். ஏனெனில் கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு பலர் இதே போன்ற உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நானும் உங்களை போலவே போராடுகிறேன் என்று அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் தனது உடல்நிலை குறித்து வெளிப்படுத்தினார் சமந்தா. இன்று நாம் விளம்பர நிகழ்வுகளை முன்னெடுக்கும் போது பலர் வந்து, 'சமந்தா தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்' என்று கூறுகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு இன்னும் உடல்நிலை சரியில்லை. ஆனால் அவர் இன்று எங்களுக்காக இங்கு வந்து என்னுடன் நடனமாடினார்.


    செப்டம்பர் ஒன்றாம் தேதி சமந்தா முகத்தில் சிரிப்பை காண வேண்டும். மேலும் எங்கள் இயக்குனர் சிவாவிற்கு ஒரு ஹிட் கொடுக்க விரும்புகிறோம். சிவா இந்த திரைக்கதையை 'டியர் காம்ரேட் ' படப்பிடிப்பின் போது சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் காதல் கதைகள் வேண்டாம் என்று நான் ஒதுங்கிக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பில் எத்தனை இடையூறுகள் வந்தாலும் ஒரு நாள் கூட சிவா எதற்கும் குறை சொல்லவில்லை. சினிமாவை விரும்பி சிரித்துக் கொண்டே படத்தை ஹிட்டாக்க வேண்டும் என பணியாற்றினார்.


    எங்கள் ஒளிப்பதிவாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் சூப்பர் ஹிட் இசையை கொடுத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு 'புஷ்பா- தி ரூல்ஸ்' இருக்கிறது. அவர்களுக்கு முழு பணமும் கிடைக்கும். ஆறு வருடங்களாக இத்துறையில் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் என்னை மிகவும் நேசிக்கிறீர்கள். என்னுடைய வெற்றி தோல்வியில் என்னை சுற்றி எத்தனை பேர் மாறினாலும் நீங்கள் மாறவில்லை. நீங்கள் எப்போதும் என்னிடம் அன்பை காட்டி, என்னுடன் இருக்கிறீர்கள். செப்டம்பர் ஒன்றாம் தேதி உங்கள் அனைவரின் முகத்திலும் புன்னகையை காண விரும்புகிறேன்" என்று பேசினார்.

    • இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'லெவன்'.
    • தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகவுள்ளது.

    'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இயக்குனர் சுந்தர். சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'லெவன்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் 'சரபம்', 'சிவப்பு' மற்றும் 'பிரம்மன்' உள்ளிட்ட படங்களில் நடித்த நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார்.


    மேலும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.


    'லெவன்' திரைப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் பேசியதாவது, "ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள், அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.


    'லெவன்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • 'லியோ’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.


    இந்த நிலையில், இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒரே நாளில் 15.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





    ×