என் மலர்
சினிமா செய்திகள்

ஒரே வாரத்தில் வசூலில் அலப்பறை கிளப்பிய ஜெயிலர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் போஸ்டர்
மேலும், 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.






