என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை விஜய் ஆண்டனி தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன் 2', 'கொலை' போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரோமியோ' திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    ரோமியோ போஸ்டர்

    மேலும், இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, "என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.




    • பிரபல ஈரானிய இயக்குனராக இருப்பவர் மஜித் மஜிதி.
    • இவர் பாலிவுட் சினிமா தன்னை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அது ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று கூறினார்.

    பிரபல ஈரானிய இயக்குனரான மஜித் மஜிதி 'சில்ரன் ஆஃப் ஹெவன்', 'தி கலர் ஆஃப் பாரடைஸ்' உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

    சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மஜித் மஜிதி பாலிவுட் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில், திரைப்பட உருவாக்கத்துக்கான சிறந்த திறமையும் மகத்தான ஆற்றலும் இருப்பதாக நம்புகிறேன். மக்கள் தொகையை அதிகம் கொண்ட வளமான நாடு என்பதால் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள் அதிகம் உள்ளது.


    ஆனால் பாலிவுட் அந்தத் திறனை சரியாகப் பயன்படுத்துவதில்லை. பாலிவுட் சினிமா தன்னை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அது ஒரு பிரச்சனையாக இருக்கும். இப்போது எடுப்பது போன்ற படங்களையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தால் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில், இப்போது இருக்கும் ரசிகர்கள் கூட இருக்கமாட்டார்கள் என்று பயப்படுகிறேன்.

    பாலிவுட் இன்றைய காலகட்ட பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் கதைகள் மற்றும் படங்களை உருவாக்க வேண்டும். நான் பாலிவுட்டுக்கு எதிரானவன் இல்லை. அவர்கள் எடுக்கும் கதையில் சிறிய மாற்றம் வேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். இளம் தலைமுறையினர் திறமையுடன் இருப்பதாக நம்புகிறேன் என்று பேசினார்.

    • ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சந்திரமுகி- 2’.
    • இப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'சந்திரமுகி -2' படத்தில் வடிவேலுவின் டப்பிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சந்திரமுகி பத்து பாகம் வந்தாலும் சந்திரமுகியின் பெஸ்ட் பிரண்டு நான்தான் என்று வடிவேலு கூறும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்திற்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


    மேலும், 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 6 நாட்களை கடந்த நிலையில் இதன் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தொடர்ந்து விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால், சுதந்திர தினத்தை காரைக்குடியில் உள்ள பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இதை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.




    • சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
    • வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சித்ராவின் தந்தை கூறியுள்ளார்.

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


    மேலும், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் 2021-ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்டத்திலேயே இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமல்லாமல், முதுமை காரணமாக வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதால் வழக்கை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’.
    • நடிகர் அர்ஜுன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'லியோ'.இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'லியோ' படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியாகி கவனம் ஈர்த்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் யூ டியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • கவிஞர் வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
    • இவர் அடித்தட்டு மக்களின் மனதில் சாதி என்ற பாகுபாடுகளை விதைக்க கூடாது என்று கூறினார்.

    திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.

    சென்னை பெசன்ட் நகரில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது, அடித்தட்டு மக்களின் மனதில் சாதி என்ற பாகுபாடுகளை விதைக்க கூடாது. கல்விக் கூடங்கள் சாதிகளை ஒழிக்க பிறந்த மன மருத்துவ நிலையங்கள், அந்த நிலையங்களிலேயே சாதி தலை தூக்குவதை நாம் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

    சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும், அதற்கு மேல் பெருமையோ இழிவோ கொடுக்க வேண்டாம். சாதி என்ற மாய பிம்பத்தை கடந்து கல்வி, அறிவு, பகுத்தறிவு மற்றும் சமவாய்ப்பு தளங்களில் முன்னேற வேண்டும் என்பதை என் கோரிக்கையாக வைக்கிறேன் என்று கூறினார்.

    மேலும், திரைப்படங்கள் சாதியை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படுவது இல்லை, ஏனென்றால் ஒரு சாதியை வலியுறுத்தி எடுக்கும் படம் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை. குறிப்பிட்ட சாதியை குறித்து எடுக்கப்படும் படம் அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் எண்ணிக்கையில் நின்று போகும். அதனால் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறவர்கள், நடிப்பவர்கள், இயக்குபவர்கள் யாரும் ஒரு குறிப்பிட்ட சாதி படத்திற்காக தன்னை அர்ப்பணிப்பது இல்லை. ஆனால், அந்த குறிப்பிட்ட சமூகத்தின் சம்பவங்களை மட்டும் அவர்கள் மையப்படுத்துகிறார்கள் என்றால் சாதி அங்கு தலைதூக்காது" என்று பேசினார்.

    • ராமேஸ்வரம் கடலில் லட்சக்கணக்கானோர் இன்று கடலில் தர்ப்பணம் செய்தனர்.
    • 22 தீர்த்தங்கள் உள்ளடங்கிய தீர்த்தத்தை இளையராஜா தலையில் தெளித்து புனித நீராடினார்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று ஏராளமானோர் தங்களது முன்னோர்கள் நினைவாக கடல் மற்றும் கோவில் குளங்களில் தர்ப்பணம் செய்தனர். ராமேஸ்வரம் கடலில் இன்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கானோர் கடலில் தர்ப்பணம் செய்தனர்.

    இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் உள்ளடங்கிய தீர்த்தத்தை இளையராஜா தலையில் தெளித்து புனித நீராடினார். அதன் பின்னர் சுவாமி பர்வதவர்தினி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

    ஆடி அமாவாசையையொட்டி திருமழிசை அருகே உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை நடிகர் செந்தில் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். அங்குள்ள தெப்ப குளக்கரையில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்தார்.

    • சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • சூர்யாவின் 43-வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து சூர்யா நடிக்கும் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் சூர்யா ரசிகர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் மும்பையில் செட்டிலாகிவிட்டீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


    குடும்பத்துடன் சூர்யா

    இதற்கு, தனது மகள் தியா, மகன் தேவ் இருவரும் மும்பையில் படித்து வருகின்றனர். அதனால் அவர்களைப் பார்க்க அடிக்கடி அங்கு சென்றுவருகிறேன். மற்றபடி நான் சென்னையில்தான் இருக்கிறேன். மும்பையில் செட்டிலாகவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ’மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய இப்படம் ரூ.89 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. 'மாவீரன்' திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.


    இந்நிலையில், 'மாவீரன்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இப்பொழுதுதான் 'மாவீரன்' படம் பார்த்தேன். மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துவதில் உள்ள அரசியலை, நல்ல முறையில் படமாக எடுத்துள்ளீர்கள். படத்தின் கற்பனை பகுதி அருமையாக இருந்தது, அரசியல் தாக்கமாக இருந்தது. நீ தங்குவியா இந்த வூட்டுல? படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.





    • லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
    • நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.


    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தளபதி 68' திரைப்படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    ×