என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜ்"

    • கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
    • மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.

    திருவாரூர்:

    பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்டுகளின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒரு கிலோ பருத்தியை ரூ.100-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து ஏஜெண்டுகளையும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா பகுதிகளில் பருத்தி செடிகள் இளம் பயிராக இருந்தபோது 2 முறை பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி முடிவடைந்துள்ள நிலையில் பருத்தி பஞ்சுகளுக்கு உரிய விலை இல்லை எனக்கூறி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் பருத்தி ஏலங்களில் கோவை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் உள்ள பஞ்சு மில் உரிமையாளர்களின் முகவர்கள் கலந்து கொள்வதில்லை. திருவாரூரை சுற்றியுள்ள இடைத்தரகர்களை வைத்தே ஏலம் விடப்படுகிறது.

    இதனை கண்டித்தும், பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க. நடத்தியது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடவாசல் பகுதியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.71-க்கு விலை போனது.

    மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் துரிதமாக நடைபெறுவதில்லை. கொள்முதல் செய்யப்படும் நெல்லும் பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கப்படுவதில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவது மட்டும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கடைக்கோடி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஏற்கனவே முடிவு செய்தனர்.
    • 24-ந் தேதி திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட கோடைக்கால நீர், மோர் பந்தலை அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கடைக்கோடி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஏற்கனவே முடிவு செய்தனர். கிட்டத்தட்ட நீதிமன்றமும் அதைத்தான் முடிவு செய்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் 24-ந் தேதி திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. அ.தி.மு.க.வுக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது.

    அ.தி.மு.க, பா.ஜ.க இடையே கூட்டணி நல்ல முறையில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • 6 பேர் மீது 810 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.

    தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மொத்தம் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    காமராஜர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோரின் உடந்தையுடன் தஞ்சாவூரில் என்.ஏ.ஆர்ச் ஓட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன், இன்பன் ஆகியோரின் பெயர்களில் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் (ஸ்ரீவாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் லிமிடெட்) என்ற பெயரில் நவீன பன்னோக்கு மருத்துவமனையை கட்டியதும் தெரிய வந்தது.

    இந்த வகைகளில் ரூ.127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்.

    இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர சபாநாயகரிடம் அனுமதி பெற்று இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறப்பு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும் போது, இது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    • பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் மரியாதை செலுத்தினார்.
    • சமூக அதிகாரமளிப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும்.

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது நினைவிடம் மற்றும் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளுகளை சேர்ந்தவர்கள், பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் மரியாதை செலுத்தினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். சமூக அதிகாரமளிப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதான அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
    • வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சித்ராவின் தந்தை கூறியுள்ளார்.

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


    மேலும், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் 2021-ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்டத்திலேயே இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமல்லாமல், முதுமை காரணமாக வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதால் வழக்கை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×