என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கு நன்றி- விஜய் ஆண்டனி

நடிகை விஜய் ஆண்டனி தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இப்படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கு நன்றி- விஜய் ஆண்டனி
Published on

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன் 2', 'கொலை' போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரோமியோ' திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

ரோமியோ போஸ்டர்

மேலும், இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, "என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com