பிரசித்தி பெற்ற கோவில்களில் வழிபாடு செய்த பிரபலங்கள்

ராமேஸ்வரம் கடலில் லட்சக்கணக்கானோர் இன்று கடலில் தர்ப்பணம் செய்தனர்.22 தீர்த்தங்கள் உள்ளடங்கிய தீர்த்தத்தை இளையராஜா தலையில் தெளித்து புனித நீராடினார்.
பிரசித்தி பெற்ற கோவில்களில் வழிபாடு செய்த பிரபலங்கள்
Published on: 

ஆடி அமாவாசையையொட்டி இன்று ஏராளமானோர் தங்களது முன்னோர்கள் நினைவாக கடல் மற்றும் கோவில் குளங்களில் தர்ப்பணம் செய்தனர். ராமேஸ்வரம் கடலில் இன்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கானோர் கடலில் தர்ப்பணம் செய்தனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் உள்ளடங்கிய தீர்த்தத்தை இளையராஜா தலையில் தெளித்து புனித நீராடினார். அதன் பின்னர் சுவாமி பர்வதவர்தினி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

ஆடி அமாவாசையையொட்டி திருமழிசை அருகே உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை நடிகர் செந்தில் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். அங்குள்ள தெப்ப குளக்கரையில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com