என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’.
    • இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.


    இந்தியன் 2 போஸ்டர்

    இந்நிலையில், ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்ரை வெளியிட்டுள்ளது. கேஷுவலாக கமல் நிற்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, "ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளதாகவும் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களை நெல்சன் இயக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது.

    மேலும், ரஜினி- விஜய் இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்றும் நேரம் வரும்போது நிச்சயம் செய்வேன் என்று நெல்சன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை சமந்தா ‘குஷி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்துள்ள 'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தன் சிகிச்சை குறித்த செய்திகள் மற்றும் தான் செல்லும் இடங்கள் குறித்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா வெள்ளை நிற உடையில் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் அக்ஷய்குமார் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வரும் அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.


    என்னதான் இந்திய படங்களில் நடித்தாலும் நடிகர் அக்ஷய் குமார் கனடா நாட்டு குடிமகன் தான் என பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், இவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதற்கான சான்றை பகிர்ந்து தனது சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    நடிகர் அக்ஷய்குமார் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்டுக்காக விண்ணப்பித்ததாகவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என அவர் தெரிவித்திருந்தார். 





    • 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
    • இதில் நடிகர் டாணா டகுபதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் நானி மற்றும் ராணா டகுபதி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணா டகுபதி, "பிரபல இந்தி படம் ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து கொண்டிருந்த போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஒருவர் படப்பிடிப்பிற்கு நடுவே தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர் தன் டைலாக்கையும் மறந்து பல டேக்குகளை எடுத்துக் கொண்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த துல்கர் சல்மான் மிகவும் அமைதியாக அவர் கேட்கும் டேக்குகளை கொடுத்தார்" என்று கூறினார்.



    இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலர் சோனம் கபூரை தான் ராணா சொல்கிறார் என்று தகவல்களை பரப்பி வந்தனர். இந்நிலையில், இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் ராணா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் சோனம் கபூர் குறித்து கூறியதாக பரவி வந்த செய்தி முற்றிலும் தவறானது. நண்பர்களாக, நாங்கள் அடிக்கடி விளையாட்டுத்தனமான கேலிகளை பரிமாறிக்கொள்கிறோம். எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சோனம் மற்றும் துல்கர் இருவரிடமும் எனது மனப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவு தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.




    • நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.





    • இசை கலைஞரான ரிக்கி கேஜி இந்திய தேசிய கீதத்தின் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • இந்த இசை லண்டனில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 3 முறை கிராமி விருது பெற்ற இசை கலைஞரான ரிக்கி கேஜி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து இந்திய தேசிய கீதத்தின் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    100 உறுப்பினர்களை கொண்ட ராயல் பில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவின் இந்த இசை லண்டனில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சசிதரூர் எம்.பி., பா.ஜ.க. எம்.பி. பூனம் மகாஜன் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து ரிக்கி கேஜை பாராட்டி வருகின்றனர்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    மார்க் ஆண்டனி போஸ்டர்

    இந்நிலையில், 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'மார்க் ஆண்டனி' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷால் இரட்டை வேடத்தில் இருக்கும் இந்த போஸ்டரில் செப்டம்பர் 15-ஆம் தேதி 'மார்க் ஆண்டனி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


    • பாரதிராஜா நடித்துள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படம் வருகிற செப்டம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலரை முன்னாள் நீதிபதி சந்துரு தனது இல்லத்தில் வைத்து வெளியிட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள தங்கர் பச்சான், "இன்னும் இரண்டு வாரங்களில் செப்டம்பர் 1- ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் எனது இயக்கத்தில் வெளியாகும் "கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மேனாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார்.



    அவரைப்போன்ற மக்கள் பணியை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட நீதியரசரின் பாத்திரத்தில் திரு. பாரதிராஜா அவர்கள் நடித்திருப்பதால் அவர் வெளியிடுவதே பொருத்தம் எனக்கருதினோம். மனம் உவந்துப்பாராட்டி வெளியிட்டு வாழ்த்திய அண்ணன் திரு. சந்துரு அவர்களுக்கு எங்களின் படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.





    • இயக்குனர் சீனுராமசாமி பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் இன்று வரை பல விருதுகளை குவித்து வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் "சகோதரர் அண்ணாமலைக்கு வணக்கம். அரசின் திட்டங்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை, சில திரும்ப பெறப்பட்டுள்ளன. நடைமுறையில் நீட் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே பொதுக்

    கருத்துக்கணிப்பு எடுத்து நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க கலைஞனாக வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.




    • லியோ படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
    • லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கான் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் லியோ. விஜய் மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. படப்பிடிப்பை தொடர்ந்து படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

     

    இந்த நிலையில், லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் லியோ படத்தில் நடித்து இருப்பதாக தெரிவித்து விட்டார். பிறகு, தெரியாமல் கூறிவிட்டேன் என்று நொந்து கொண்டார்.

    முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் வேடத்தில் அனுராக் காஷ்யப் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஜினி ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார்.
    • சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    'ஜெயிலர்' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு ரஜினி ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.


    சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களுடன் சிறிது நேரம் ரஜினி உரையாடினார். ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நாளை 77-வது சுதந்திர தினத்தையொட்டி நடிகர் ரஜினி துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகளுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தி கொண்டாடினார். மேலும் ஆதி பத்ரிநாத் கோயிலில் 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவை வழிபட்டார்.

    ×