முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட்ட 'கருமேகங்கள் கலைகின்றன' டிரைலர்

பாரதிராஜா நடித்துள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'.இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட்ட 'கருமேகங்கள் கலைகின்றன' டிரைலர்
Published on

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படம் வருகிற செப்டம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலரை முன்னாள் நீதிபதி சந்துரு தனது இல்லத்தில் வைத்து வெளியிட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள தங்கர் பச்சான், "இன்னும் இரண்டு வாரங்களில் செப்டம்பர் 1- ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் எனது இயக்கத்தில் வெளியாகும் "கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மேனாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார்.

அவரைப்போன்ற மக்கள் பணியை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட நீதியரசரின் பாத்திரத்தில் திரு. பாரதிராஜா அவர்கள் நடித்திருப்பதால் அவர் வெளியிடுவதே பொருத்தம் எனக்கருதினோம். மனம் உவந்துப்பாராட்டி வெளியிட்டு வாழ்த்திய அண்ணன் திரு. சந்துரு அவர்களுக்கு எங்களின் படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com