லியோ படத்தில் இவரா? அவசரத்தில் உண்மையை சொன்ன மன்சூர் அலி கான்..!

லியோ படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கான் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
லியோ படத்தில் இவரா? அவசரத்தில் உண்மையை சொன்ன மன்சூர் அலி கான்..!
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் லியோ. விஜய் மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. படப்பிடிப்பை தொடர்ந்து படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் லியோ படத்தில் நடித்து இருப்பதாக தெரிவித்து விட்டார். பிறகு, தெரியாமல் கூறிவிட்டேன் என்று நொந்து கொண்டார்.

முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் வேடத்தில் அனுராக் காஷ்யப் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com