என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹர்காரா'.
    • இப்படத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

    'வி 1 மர்டர் கேஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஹர்காரா'. தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்கு செல்லும் போஸ்ட்மேன் அங்கு படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும் பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.


    இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கவுதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகில் மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது.


    கலர்புல் பீட்டா மோமண்ட் (KALORFUL BETA MOVEMENT) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ராம் சங்கர் இசையமைத்துள்ளார். மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள "ஹர்காரா" திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.





    • இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'.
    • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.


    தற்போது இவர் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி மீண்டும் வெளியாகவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.


    மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘விக்ரம்’.
    • இப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், ரோலக்ஸ் கதாபாத்திரம் வைத்து தனி திரைப்படம் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா, ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். அப்போது தனது அடுத்த படங்கள் குறித்து அவர் கூறியுள்ளார். அதில், 'ரோலக்ஸ்' கேரக்டரை வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கதை சொன்னதாகவும் அதில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
    • நீலகிரியைச் சேர்ந்த புரோகித ஶ்ரீ எனும் கண்பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டுள்ளார்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9 தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.


    இந்த சீசனில் ஒளிபரப்பான எபிஸோடில், நீலகிரியைச் சேர்ந்த புரோகித ஶ்ரீ எனும் கண்பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அழகான குரலால், அனைவரையும் அசர வைத்தார். கண் பார்வையில்லையென்றாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அந்த சிறுமியின் தைரியம், இசைத்திறமை அனைவரையும் கவர்ந்தது.

    இந்நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன், சிறுமி புரோகித ஶ்ரீ உடைய கதையை கேட்டு உருக்கமாகி கண்ணீர் சிந்தினார். மேலும் புரோகித ஶ்ரீக்கு மீண்டும் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதியளித்தார். அவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


    இதே நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

    எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தை கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் வாய்ப்பை தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன்.


    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், திறமையால் ஒளிரும் எளிமையான சிறுவர்களுக்கு பெரும் மாற்றத்தை, வாய்ப்பை வழங்கும், இசையமைப்பாளார் தமனின் செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

    • இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புல்லட்’.
    • இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.

    'டைரி' பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புல்லட்'.இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிக்கிறார்.


    விறுவிறுப்பான ஆக்ஷன், த்ரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    புல்லட் போஸ்டர்

    இந்நிலையில், 'புல்லட்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    நடிகர் சுனில், ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இதைத்தொடர்ந்து, சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவியது. இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில் சூர்யா அப்டேட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக சூர்யா, ரசிகர்களை சந்தித்த போது தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


    'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல் மந்திரி பினராயி என பலர் பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்தை செல்போனில் அழைத்து பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பாடல் ‘ஜவான்’.
    • இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் 'ஹையோடா' பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் மற்றும் பிரியா மலி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

    நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது.


    இதனிடையே தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பூஜையில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


    தனுஷ் 51 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ராஷ்மிகா, விஜய்யின் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'.
    • இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    கருமேகங்கள் கலைகின்றன போஸ்டர்

    இந்நிலையில், கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கை சந்திரா செல்வியை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர்.
    • இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகிய 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.



    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நாங்குநேரி சம்பவம்

    நாட்டின் இதயத்தில்

    விழுந்த வெட்டு

    சாதியைக்கூட மன்னிக்கலாம்

    அதற்கு

    இழிவு பெருமை கற்பித்தவனை

    மன்னிக்க முடியாது

    சமூக நலம் பேணும்

    சமூகத் தலைவர்களே!

    முன்னவர் பட்ட பாடுகளைப்

    பின்னவர்க்குச்

    சொல்லிக் கொடுங்கள்

    அல்லது

    மதம் மாறுவதுபோல்

    சாதி மாறும் உரிமையைச்

    சட்டமாக்குங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.





    • நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தன் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் உள்ள திரையரங்கில் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    ×