என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.
    • ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஜெயிலர் படம் வெளியான நிலையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஜினி ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.

    சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து நேற்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களுடன் சிறிது நேரம் ரஜினி உரையாடினார். குளிருக்காக கையுரை மற்றும் மப்ளர் அணிந்த படி கோவிலுக்கு சென்றார். ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • டெக்னாலஜி காரணமாக எதையும் நாம் தடுக்க முடியாது.
    • எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.

    வினோத் குமார் தயாரிப்பில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் 'லோக்கல் சரக்கு'. இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். யோகி பாபு மிக முக்கியமன வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

    இந்தபட விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில்,

    இன்று சினிமாவுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்க கூடிய குழுவை கொண்டவர் ராஜேஷ் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதை நான் இன்று தான் தெரிந்துக்கொண்டேன்.

    படத்தின் கதைக்களமும் எதார்த்தமானதாக இருக்கிறது. லைப் ஸ்டைல் என்பது வேறு, பழக்கம் என்பது வேறு, எனவே எதையும் நம்மால் மாற்ற முடியாது. டெக்னாலஜி காரணமாக எதையும் நாம் தடுக்க முடியாது. அதனால் கெட்டுப்போறவங்க கெட்டுபோக தான் செய்வாங்க, அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர், அதற்கும் கீழே இருப்பவர்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால், எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. அது இவ்வளவு பெரிய பிரச்சினைகளை கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் தெரியும். எனவே மதுவால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக நன்றாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும்." என்றார்.

    • ஆண்ட்ரியா இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • 36 வயது ஆகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் ‘பிசி’யாக உள்ளார்.

    சினிமா பின்னணி பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம்,தரமணி, வடசென்னை ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார்.

    36 வயது ஆகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் 'பிசி'யாக உள்ளார்.

    தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட புஷ்பா படத்தில் "ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா" என்ற பாடலை பாடியிருந்தார்.

    இந்த பாடல் பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனல்மேல் பனித்துள்ளி என்ற படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா படம் குறித்து கூறியதாவது:-

    அனல்மேல் பனித்துளி படத்தில் ஒரு காட்சியில் நடித்த போது கூச்சமாக இருந்தது. இது புதுமையாகவும் இருந்தது. இந்த காட்சிகளைவிட என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஆண்ட்ரியா இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சித்திக் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    • இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.


    இயக்குனர் சித்திக் வீட்டிற்கு சென்ற சூர்யா

    கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வந்த இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் காலமானார். இவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யா மறைந்த இயக்குனர் சித்திக் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் அசோக் செல்வன் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகையை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் அசோக் செல்வன் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட்டாகாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர்.
    • இவர்களை அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கியுள்ளனர்.

    நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அரிவாள் வெட்டில் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாடகர் தெருக்குரல் அறிவு இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics chemistry maths எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமா சொல்லிக்கொடுங்க! Anti-Caste மனநிலை மாணவப்பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படனும்.


    தெருக்குரல் அறிவு பதிவு

    இடஒதுக்கீடு ஒரு இலவசம் , ஆண்ட பெருமைகள் , சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவது தான் சமகால கல்வியின் பிரதான நோக்கமா இருக்கணும்.சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலகாலமாக சிந்திக்கிடக்கிறது என விவாதிக்காமல் , எல்லா ரத்தமும் சிவப்பு என்றும் சாதியை ஒரு ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும் , இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும் ! சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது" என்று பதிவிட்டுள்ளார்.


    • பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது.
    • பலரும் தங்களது வாழ்த்துக்களை கமல்ஹாசனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

    1960-ஆம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    வாழ்த்தியவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி என கமல்ஹாசன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.

    உங்கள்

    நான் என பதிவிட்டுள்ளார்.

    • நாங்குநேரி சம்பவம் குறித்து பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
    • அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

    நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரும், சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    சாதி வெறி மண்ணோடு மண்ணாகட்டும் என்ற வரியுடன் புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




    • இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லக்கி மேன்'.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.


    இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'லக்கி மேன்' படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    லக்கிமேன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
    • இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். 1960-ஆம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்றார்.


    தொடர்ந்து, பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி, போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு அபூர்வ சகோதரர்கள், நாயகன், தேவர் மகன், இந்தியன், விக்ரம் என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தலைமுறை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


    தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    அதில், "ஏற்ற இறக்கங்கள், சவால்கள் அனைத்தையும் அவர் சந்தித்தார். ஆனால் எதுவும் உலக நாயகனையும் திரைத்துறையை உயர்த்த அவர் எடுக்கும் முயற்சியையும் நிறுத்தவில்லை. ஆறு தசாப்தங்களின் ஒப்பற்ற பேரரசர், தற்போது சினிமாவில் தன்னுடைய 64 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.




    • பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி- 2’.
    • இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.


    சந்திரமுகி 2 போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஸ்வாகதாஞ்சலி' பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில், இந்த பாடல் ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.




    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவராஜ் குமார் படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.





    ×