என் மலர்
சினிமா செய்திகள்
- பிரபலமான பாடகிகளுள் ஒருவர் சின்மயி
- இவர் சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். சின்மயி சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பாடகி சின்மயி குடும்பத்தாரிடம் இருந்து நூதன முறையில் பணமோசடி நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சின்மயி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், எங்கள் குடும்பத்தாரிடம் போலியான TNEB-பில்-பே ஸ்கேம் நடைபெற்றுள்ளதாகவும் OTP எண் பகிரப்படாமலேயே இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகவும் செல்போனுக்கு வந்த லிங்கை க்ளிக் செய்ததும் வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல்போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபகாலமாக பிரபலங்கள் பலரிடம் இதுபோன்ற நூதன மோசடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தனர்.
- இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அரிவாள் வெட்டில் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
நாங்குநேரி சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இப்படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜெயிலர் படத்தை மிகவும் ரசித்தேன். சூப்பர் ஸ்டார் மிகவும் சிறந்தவர். நெல்சன் மீண்டும் நிரூபித்துவிட்டார். டார்க் காமெடி காட்சிகளை மிகவும் ரசித்தேன். பின்னணி இசையும் அனிருத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் சத்யராஜின் தாயார் நேற்று காலமானார்.
- இவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94). இவர் கோவையில் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சத்யராஜ், தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தியறிந்து கோவைக்கு வந்துள்ளார். நாதாம்பாளுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
- இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கினார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

'ஜெயிலர்' திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.25 கோடியும் உலக அளவில் ரூ.90 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் நெல்சனை பாராட்டியுள்ளார். இது குறித்து நெல்சன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், "ஜெயிலர் திரைப்படம் பார்த்ததற்கு முதலமைச்சருக்கு மிகவும் நன்றி. உங்களின் ஊக்கமும், பாராட்டுகளுக்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Thank you u so much honourable Chief minister @mkstalin sir for watching #jailer … thanks for all the appreciation and motivation sir ???? cast and crew is really happy with ur words ?? @rajinikanth sir #kalanithimaran sir #kaviyamaran @anirudhofficial @sunpictures pic.twitter.com/3L4LUY5XMd
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) August 11, 2023
- திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ்.
- இவரது தாயார் நாதாம்பாள் இன்று காலமானார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவரது தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.

நாதாம்பாள் காளிங்கராயர்- சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94). இவர் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக நாதாம்பாள் காளிங்கராயர் இன்று மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சத்யராஜ், தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தியறிந்து கோவை விரைந்துள்ளார்.
- மர்ம கும்பல் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
- இவர்கள் இருவருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திராசெல்வி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளிக் கூடத்தில் படித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் புகுந்த மர்ம கும்பல் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த இவர்கள் இருவரையும் உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில், சின்னத்துரையை அவர் படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சிலர் சிகரெட் வாங்கி வருமாறு அடிக்கடி கூறி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சின்னத்துரை பெற்றோர் தலைமையாசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவர் சகோதரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்… pic.twitter.com/XCxkZdJgdv
— Mari Selvaraj (@mari_selvaraj) August 11, 2023
- ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
- இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஸ்வாகதாஞ்சலி' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியானது.
- ரஜினி தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம் ஆண்டில் 'காலா', '2.0' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார். இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், இவர் புதன்கிழமை தனது இமயமலை பயணத்தை தொடங்கினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்டின் ரிஷிகேஷியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் உள்ள சாமிகளை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

'ஜெயிலர்' திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.25 கோடியும் உலக அளவில் ரூ.90 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
'ஜெயிலர்' திரைப்படத்தின் கதையை ரஜினியிடம் கூறுமாறு விஜய் சொன்னதாக நெல்சன் 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மர்ம கும்பல் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
- இவர்கள் இருவருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திராசெல்வி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளிக் கூடத்தில் படித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் புகுந்த மர்ம கும்பல் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த இவர்கள் இருவரையும் உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில், சின்னத்துரையை அவர் படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சிலர் சிகரெட் வாங்கி வருமாறு அடிக்கடி கூறி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சின்னத்துரை பெற்றோர் தலைமையாசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவர் சகோதரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
- நடிகை நிலானி பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
- இவர் 'காதலும் கடந்து போகும்', 'நெருப்புடா', 'ஓம்' என சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நிலானி. இவர் சின்னத்திரை மட்டுமல்லாது, 'காதலும் கடந்து போகும்', 'நெருப்புடா', 'ஓம்' என சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வங்கி மோசடி தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.

அதில், எனது செல்போனில் சில வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். கடன் வழங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய அவர் குறைந்த வட்டியில் கடன் தருவதாக தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்று தான் கேட்டேன். அப்போது அவர் ஒரு லிங்க்கை அனுப்புவதாக கூறி அனுப்பி வைத்தார். அதில் சென்று பார்த்த போது வட்டி அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நான் கடன் வேண்டாம் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன்.

இதன்பின்னர் ஒரு செல்போனில் இருந்து எனக்கு ரூ.8.80 லட்சம் கடன் கிடைத்திருப்பதாக தகவல் வந்தது. அதற்கான மாத தவணையாக ரூ.10,998 எடுக்கப்பட்டு உள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து என்னிடம் தொடர்பு கொண்டு பேசிய நபரிடம் போன் செய்து பேசினேன். அப்போது அவர் என்னை மிரட்டினார். நிதி நிறுவனத்தில் இருந்து பேசிய நபரின் செல்போன் எண், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து உள்ளேன். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






