search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilani"

    • நடிகை நிலானி பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
    • இவர் 'காதலும் கடந்து போகும்', 'நெருப்புடா', 'ஓம்' என சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நிலானி. இவர் சின்னத்திரை மட்டுமல்லாது, 'காதலும் கடந்து போகும்', 'நெருப்புடா', 'ஓம்' என சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வங்கி மோசடி தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.


    அதில், எனது செல்போனில் சில வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். கடன் வழங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய அவர் குறைந்த வட்டியில் கடன் தருவதாக தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்று தான் கேட்டேன். அப்போது அவர் ஒரு லிங்க்கை அனுப்புவதாக கூறி அனுப்பி வைத்தார். அதில் சென்று பார்த்த போது வட்டி அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நான் கடன் வேண்டாம் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன்.


    இதன்பின்னர் ஒரு செல்போனில் இருந்து எனக்கு ரூ.8.80 லட்சம் கடன் கிடைத்திருப்பதாக தகவல் வந்தது. அதற்கான மாத தவணையாக ரூ.10,998 எடுக்கப்பட்டு உள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து என்னிடம் தொடர்பு கொண்டு பேசிய நபரிடம் போன் செய்து பேசினேன். அப்போது அவர் என்னை மிரட்டினார். நிதி நிறுவனத்தில் இருந்து பேசிய நபரின் செல்போன் எண், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து உள்ளேன். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனக்கு சம்பந்தமில்லை என கூறி வரும் நிலானி, தற்கொலை முயற்சி செய்த நிலையில், அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், நிலானியை தேடி வருகின்றனர். #Nilani
    சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் நிலானி. கணவரை பிரிந்த இவர் மதுரவாயலை அடுத்த அஷ்டலட்சுமி நகரில் மகள், மகனுடன் வசித்து வருகிறார்.

    நடிகை நிலானியும், வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், காதலன் காந்தி லலித்குமார் மீது நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுக்கிறார் என்று கூறி இருந்தார்.

    இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் நிலானியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோ படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து, நிலானி தனக்கும், காந்தி லலித்குமார் தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது நடவடிக்கை சரியில்லாததால் லலித்குமாரை விட்டு விலகி சென்று விட்டதாக கூறினார்.



    ஆனால் காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நிலானிதான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலானி தனது வீட்டில் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளிப்பதாக கூறியதையடுத்து நிருபர்கள் அங்கு சென்றனர்.

    அப்போது நிலானி கொசு மருந்தை குடித்து விட்டார் என்று அவரது 2 குழந்தைகள் கதறினர். உடனே அரை மயக்கத்தில் இருந்த நிலானியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கே.கே.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த நிலானியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது நிலானி கூறும்போது, காந்தி லலித்குமார் திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார்.



    இதற்கு முன்பு 2 முறை தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இருக்கிறார். தற்போது பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்த போது எதிர்பாராத விதமாக பலியாகி விட்டார். அவரது தற்கொலைக்கு நான் காரணமில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றேன் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    அவர் மீது 309-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலானி அங்கிருந்து திரும்பினார். ஆனால் அவர் மதுரவாயலில் உள்ள வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது 2 குழந்தைகளும் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.

    போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உள்ள நிலையில் நிலானி திடீரென்று மாயமாகி உள்ளார், அவர் எங்கு உள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Nilani #GandhiLalithKumar

    காந்தி லலித் குமார் தற்கொலைக்கு தான் காரணமில்லை என்று கூறும் நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்ற நிலையில், காந்தி பற்றி தவறான தகவலை பரப்பினால் நிலானியின் உண்மை முகத்தை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். #Nilani
    சென்னை மதுரவாயலை அடுத்த அஷ்டலட்சுமி நகரில் வசித்து வருபவர் டி.வி. நடிகை நிலானி. இவர் வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக காதலன் மீது மயிலாப்பூர் போலீசில் நிலானி புகார் கொடுத்தார். இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் இறப்பதற்கு முன்பு நிலானியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக நிலானி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் செய்தார். அதில், “தனக்கும் காந்தி லலித்குமார் தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை. அவருடன் ஒன்றாக சுற்றியது உண்மை.

    ஆனால் நாங்கள் திருமணம் செய்தது கொள்ளவில்லை. அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை விட்டு விலகி சென்று விட்டேன்” என்று கூறி இருந்தார்.



    இந்த நிலையில் நடிகை நிலானி நேற்று மதியம் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் பேட்டி அளிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

    அப்போது அவரது 2 குழந்தைகளும் கீழே இறங்கி ஓடி வந்து அம்மா கொசு மருந்து குடித்துவிட்டதாக கதறினார்கள். உடனே அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் ஏற்றி அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு நடிகை நிலானிதான் காரணம், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காந்தி உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர். இதனால் அவர் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலானியை பார்த்துக் கொள்ள யாரும் வரவில்லை. இதனால் அவரது 2 குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கிறார்கள்.

    முன்னதாக ‘லலித் குமாரின் தற்கொலைக்கு தாம் காரணமில்லை என விளக்கமளித்த நிலானி அவருக்கு ஆண்மை இல்லை’ என்று குற்றம் சாட்டினார். நிலானியின் குற்றச்சாட்டுக்கு திருவண்ணாமலையில் வசிக்கும் லலித்குமார் அண்ணன் ரகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து, ரகு கூறியதாவது:-

    என் தம்பி காந்தி லலித்குமாரும், நடிகை நிலானியும் 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். திருமணமாகாத என் தம்பி, நிலானிக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தார். நிலானியின் 2 குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகள் போல் கவனித்து வந்தார்.

    லலித்குமாரை பற்றி அவதூறு பரப்புவதை நிலானி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருடன் பழகியவர்கள் யார், யார்? என் தம்பியிடம் எவ்வளவு பணம் பறித்தார் என்பதற்கான, முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்.

    நிலானியின் குழந்தைகள் நலன் கருதி, ஆதாரங்களை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன். மீண்டும் அவதூறு பரப்பினால் நிலானி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nilani #GandhiLalithKumar #Raghu

    தொலைக்காட்சி உதவி இயக்குநர் காந்தி தற்கொலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவர் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக அவரது நிலானி கமிஷனர் அலுவகத்தில் மனு அளித்துள்ளார். #Nilani
    தொலைக்காட்சி சீரியல் நடிகை நிலானி - உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    இதையடுத்து போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவாகியதாகவும், அவரது செல்போன் சுவிட்ஸ்ஆப் செய்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.


    கோப்பு படம்

    இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்துள்ளார். 

    நடிகை நிலானி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் போலீசில் புகார் அளித்ததால், அவரது காதலர் காந்தி தற்கொலை செய்துள்ள நிலையில், இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. #Nilani
    காதலுக்காக உயிரையே மாய்த்துள்ளார், நடிகை நிலானியின் காதலன் காந்தி. ஒரு பெண்ணை... அதுவும் 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் இப்படியெல்லாம் காதலிக்க முடியுமா? என்கிற கேள்வி காந்தியின் மரணத்தால் திரும்ப திரும்ப எழுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக வசனம் பேசிய நிலானியை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு அவர் பிரபலமாகிவிட்டார்.

    இப்படி புரட்சிகரமாக குரல் எழுப்பிய நிலானியை, திருவண்ணாமலையை சேர்ந்த காந்தி காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு இதில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.



    நிலானி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளின் தாய் என்று தெரிந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி, அவரை காதலித்து வந்துள்ளார். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்த காந்தி அதற்காக தீவிரமாக முயற்சி மேற்கொண்டிருந்தார். பிரபல நடிகர் ஒருவரின் ரசிகர் மன்றத்திலும் அவர் இருந்துள்ளார்.

    ஆலப்பாக்கத்தில் ஒரே வீட்டில் குடும்பமும் நடத்தியுள்ளனர். தாலி கட்டாத மனைவியாக இருந்த நிலானியை, தனது வாழ்க்கைத் துணைவியாக்க நினைத்தது மிகப்பெரிய தவறாகி இருக்கிறது/

    இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வீடியோவில், நிலானியின் கால் விரல்களில் மெட்டி போட்டுவிடும் காந்தி 2 கால்களையும் கைகளில் ஏந்தி உள்ளங்காலில் முத்தம் கொடுக்கிறார்.

    நிலானியோ, அழுக்கு... அழுக்கு என்கிறார். அதைப் பற்றியெல்லாம் காந்தி கவலைப்படாமல் முத்தமழையை பொழிந்து கொண்டே இருக்கிறார். #Nilani #GandhiLalithKumar

    திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் வற்புறுத்துவதாக சின்னத்திரை நடிகை நிலானி போலீசில் புகார் அளித்த நிலையில், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அவரது காதலன் காந்தி லலித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Nilani
    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, போலீஸ் சீருடையில் தோன்றி, போலீசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நிலானி.

    நிலானிக்கும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.

    இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்றிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.



    இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். #Nilani #GandhiLalithKumar

    காதலன் திருமணம் செய்ய வற்புறுத்துவதாக தொலைக்காட்சி நடிகை நிலானி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார். #Nilani
    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் போலீஸ் பெண் அதிகாரி ஒருவர் தான் போலீசுக்கு எதிராக பேசியதாக கூறப்பட்டது. பின்னர்தான் அவர் டி.வி. நடிகை என்பது தெரிய வந்தது. வடபழனி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் நிலானி ஜாமீனில் வெளியே வந்தார். தொலைக்காட்சி தொடர்களில் அவர் மீண்டும் நடித்து வருகிறார்.

    நிலானி, காந்தி லலித்குமார் என்ற வாலிபருடன் பழகி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.



    இந்த நிலையில் மயிலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த காதலன் காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் காந்தி லலித்குமாரும், நானும் நண்பர்களாக பழகி வந்தோம். தற்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் தொந்தரவு செய்து வருகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை.

    இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு அசிங்கமாக பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுபற்றி மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×