என் மலர்

  சினிமா

  சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலானி - காந்தியின் வீடியோ
  X

  சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலானி - காந்தியின் வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை நிலானி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் போலீசில் புகார் அளித்ததால், அவரது காதலர் காந்தி தற்கொலை செய்துள்ள நிலையில், இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. #Nilani
  காதலுக்காக உயிரையே மாய்த்துள்ளார், நடிகை நிலானியின் காதலன் காந்தி. ஒரு பெண்ணை... அதுவும் 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் இப்படியெல்லாம் காதலிக்க முடியுமா? என்கிற கேள்வி காந்தியின் மரணத்தால் திரும்ப திரும்ப எழுகிறது.

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக வசனம் பேசிய நிலானியை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு அவர் பிரபலமாகிவிட்டார்.

  இப்படி புரட்சிகரமாக குரல் எழுப்பிய நிலானியை, திருவண்ணாமலையை சேர்ந்த காந்தி காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு இதில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.  நிலானி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளின் தாய் என்று தெரிந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி, அவரை காதலித்து வந்துள்ளார். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்த காந்தி அதற்காக தீவிரமாக முயற்சி மேற்கொண்டிருந்தார். பிரபல நடிகர் ஒருவரின் ரசிகர் மன்றத்திலும் அவர் இருந்துள்ளார்.

  ஆலப்பாக்கத்தில் ஒரே வீட்டில் குடும்பமும் நடத்தியுள்ளனர். தாலி கட்டாத மனைவியாக இருந்த நிலானியை, தனது வாழ்க்கைத் துணைவியாக்க நினைத்தது மிகப்பெரிய தவறாகி இருக்கிறது/

  இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வீடியோவில், நிலானியின் கால் விரல்களில் மெட்டி போட்டுவிடும் காந்தி 2 கால்களையும் கைகளில் ஏந்தி உள்ளங்காலில் முத்தம் கொடுக்கிறார்.

  நிலானியோ, அழுக்கு... அழுக்கு என்கிறார். அதைப் பற்றியெல்லாம் காந்தி கவலைப்படாமல் முத்தமழையை பொழிந்து கொண்டே இருக்கிறார். #Nilani #GandhiLalithKumar

  Next Story
  ×