search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு
    X

    நிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு

    காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனக்கு சம்பந்தமில்லை என கூறி வரும் நிலானி, தற்கொலை முயற்சி செய்த நிலையில், அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், நிலானியை தேடி வருகின்றனர். #Nilani
    சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் நிலானி. கணவரை பிரிந்த இவர் மதுரவாயலை அடுத்த அஷ்டலட்சுமி நகரில் மகள், மகனுடன் வசித்து வருகிறார்.

    நடிகை நிலானியும், வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், காதலன் காந்தி லலித்குமார் மீது நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுக்கிறார் என்று கூறி இருந்தார்.

    இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் நிலானியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோ படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து, நிலானி தனக்கும், காந்தி லலித்குமார் தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது நடவடிக்கை சரியில்லாததால் லலித்குமாரை விட்டு விலகி சென்று விட்டதாக கூறினார்.



    ஆனால் காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நிலானிதான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலானி தனது வீட்டில் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளிப்பதாக கூறியதையடுத்து நிருபர்கள் அங்கு சென்றனர்.

    அப்போது நிலானி கொசு மருந்தை குடித்து விட்டார் என்று அவரது 2 குழந்தைகள் கதறினர். உடனே அரை மயக்கத்தில் இருந்த நிலானியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கே.கே.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த நிலானியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது நிலானி கூறும்போது, காந்தி லலித்குமார் திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார்.



    இதற்கு முன்பு 2 முறை தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இருக்கிறார். தற்போது பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்த போது எதிர்பாராத விதமாக பலியாகி விட்டார். அவரது தற்கொலைக்கு நான் காரணமில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றேன் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    அவர் மீது 309-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலானி அங்கிருந்து திரும்பினார். ஆனால் அவர் மதுரவாயலில் உள்ள வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது 2 குழந்தைகளும் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.

    போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உள்ள நிலையில் நிலானி திடீரென்று மாயமாகி உள்ளார், அவர் எங்கு உள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Nilani #GandhiLalithKumar

    Next Story
    ×