என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘வேதாளம்’.
    • இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார்.

    சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015-ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு 'போலா ஷங்கர்' என பெயரிடப்பட்டு உள்ளது.


    இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. 'போலா ஷங்கர்' படத்தின் அதிகாலை ரசிகர் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆந்திர மாநில அரசுக்கு படக்குழு கோரிக்கை வைத்திருந்தனர். ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங் 20 சதவீதம் அந்தந்த மாநிலத்தில் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே மாநில அரசின் சலுகைகள் வழங்க முடியும்.


    ஆனால் 'போலா ஷங்கர்' திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கானாவில் எடுக்கப்பட்டு உள்ளதால் சலுகைகள் வழங்க முடியாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து ஆந்திராவில் உள்ள சினிமா தியேட்டர்களில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    • நடிகர் சந்தானம் தற்போது ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.


    பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.


    கிக் போஸ்டர்

    'கிக்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 'கிக்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


    • ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் ரூ.25 கோடியும் உலக அளவில் ரூ.90 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார்.

    கமல்ஹாசனின் 'தூங்கா வனம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் தயாரிக்கிறார்.


    அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. சைமன் கே கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். 

    • நடிகை ராதிகா தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது .


    நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார்.

    இந்நிலையில், நடிகை ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை அவர் தன் கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால்.
    • விஷால் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

    செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஷால் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

    சில நாட்களாக நடிகர் விஷால் - நடிகை லட்சுமி மேனன் இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.


    இந்நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து விஷால் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பொதுவாக என்னைப் பற்றிய வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என்று பரவி வரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது.

    என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து அவருடைய அடையாளத்தை கெடுக்கிறீர்கள். ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • சிம்புவின் 48-வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
    • இப்படம் 2024-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    வைரலாகும் பதிவு

    இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் 'எஸ்.டி.ஆர். 48' படத்தின் அப்டேட் எப்போ? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விரைவில் வரும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ’ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.


    விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்

    இந்நிலையில், விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் படம் நன்றாக இல்லை என்றும் 'சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க' என்றும் கூறியதால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




    • ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று வெளியானது.
    • இந்த படத்தை காண மதுரை தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த்தின் 169 திரைப்படமான ஜெயிலர் இன்று ரிலீஸ் ஆனது. மதுரையில் 28 தியேட்டர்களில் ஜெயிலர் திரைப்படம் இன்று காலை 8.30 மணிக்கு முதல் காட்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை காண மதுரையில் தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையப் பகுதியில் உள்ள தியேட்டர் முன்பு ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், துணை செயலாளர் அழகர் உள்ளிட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டனர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.


    மதுரையில் தியேட்டரில் ஜெயிலர் படம் பார்க்க சிறைக்கைதி வேடத்தில் வந்த ரசிகர்கள்.

    சுமார் 50 கிலோ எடையுள்ள கேக் வெட்டி ஜெயிலர் படத்தை வரவேற்றனர். முதல் காட்சியை காண ரசிகர்கள் சிலர் சிறை கைதிபோல உடையணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து தியேட்டர் வாசலில் இனிமேல் மது அருந்த மாட்டோம் என்று உறுதிமொழியையும் எடுத்தனர்.

    இதையடுத்து அவர்கள் தியேட்டர்களில் ஆர்வத்துடன் சென்று படம் பார்த்தனர். முன்னதாக தியேட்டர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் கட்-அவுட்டுகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலைகள், பாலாபிஷேகங்கள் செய்து கொண்டாடினர்.

    படம் தொடங்கியதும் ரஜினியின் முதல் அறிமுக தோற்றத்தில் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 28 தியேட்டர்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திரைப்படம் சிறப்பாக இருப்பதாகவும், என்றுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்றும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு பணிப்பெண் ஈஸ்வரி நகைகளை திருடி வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.
    • ஈஸ்வரியிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.


    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- ஈஸ்வரி

    இதைத்தொடந்து பணிப்பெண் ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஈஸ்வரி அவரது மகள் பிருந்தா மற்றும் மஞ்சுளா ஆகியோரது வங்கி கணக்குகளை முடக்கி தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மந்தவெளி கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஈஸ்வரி, மஞ்சுளா மற்றும் பிருந்தா ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனுவில், தங்களுடைய கடின உழைப்பில் சம்பாதித்து வைத்திருக்கும் வங்கி கணக்குகளை முடக்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனுவிற்கு ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

    • நடிகர் ரஜினி 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.


    இந்நிலையில், நடிகர் ஷாருக்கான், ரஜினி சார் மாஸ் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அதாவது, நடிகர் ஷாருக்கான் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் 'ஜெயிலர்' திரைப்படம் பார்ப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, கண்டிப்பாக பார்ப்பேன்.. ஐ லவ் ரஜினி சார்.. அவர் மாஸ்! அவர் 'ஜவான்' படப்பிடிப்பு தளத்திற்கு வந்து எங்களை ஆசிர்வதித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ’ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.


    ஜப்பான் தம்பதி

    ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜப்பானில் அவரது படத்துக்கு தனி மவுசே உண்டு. அந்த நாட்டில் ஒசாகா பகுதி ரஜினி மன்றத்தின் தலைவராக இருந்து வரும் யாசூடா ஹிதோஷி என்ற தீவிர ரசிகர் தனது மனைவியுடன் ஒசாகாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். இன்று காலை அவர் சென்னையில் உள்ள தியேட்டரில் மற்ற ரசிகர்களுடன் அமர்ந்து ஆரவாரத்துடன் ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தார். படம் முடிந்து வெளியில் வந்த அவர் தனது மனைவியுடன் தலைவர் படத்தை பார்ப்பதற்காகவே சென்னை வந்ததாக தமிழில் பேசி அனைவரையும் அசரவைத்தார். ஜப்பான் ரசிகரின் கொண்டாட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ×