என் மலர்
சினிமா செய்திகள்
- நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் ஆராவாரத்துடன் வெளியானது.

இதையடுத்து மலையாள இயக்குனர் சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள 'ஜெயிலர்' படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, கேரளாவில் 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படம் இன்று வெளியாகுவதாலும் ஒரே நேரத்தில், ஒரே தலைப்பில் 2 படங்கள் வெளியானால் அதன் கருப்பொருளின் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்பதால் மலையாள 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியானது.
- ஜெயிலர் படத்தை பார்த்த பிறகு சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் திரையரங்கம் ஒன்றில் ஜெயிலர் படம் பார்த்த சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, படம் நல்லா இருக்கு, இயக்குனர் நெல்சன், ரஜினி சாருக்கு வாழ்த்துக்கள். கல், மண், காதல் இருக்கும் வரை என்னைக்கும் சூப்பர் ஸ்டார்தான் நம்பர் ஒன் என்றார்.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’.
- இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இப்படம் குறித்து பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் 'நேர்கொண்ட பார்வை' அஜித் தனது சினிமா பயணத்தில் எடுத்த தவறான முடிவு என்று பதிவிட்டிருந்தார்.

அஜித்- காயத்ரி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை காயத்ரி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு படத்தின் வெற்றிக்கு பாக்ஸ் ஆஃபிஸ் என்பதை மட்டுமே அளவுகோலாக வைக்கக் கூடாது. அது சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இனிமேலும் அது தொடரும்' என பதிவிட்டுள்ளார்.
I think the measuring unit for success needs to go beyond the box office and should take into account the social impact too. #Nerkondapaarvai and #AjithKumar opened up discussions about consent in circles where it might've taken years, maybe even decades for it to trickle down.. https://t.co/4XzxH4sFV5
— Gayathrie (@SGayathrie) August 9, 2023
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது.
- இப்படம் பார்க்க இயக்குனர் நெல்சன் திரையரங்கு வந்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படம் பார்க்க சென்னை சத்யம் திரையரங்கிற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க திரைப்பிரபலங்கள் பலர் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அதில், "தலைவர் நிரந்தரம் நெல்சா' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Thalaivar Nirandharam ???
— Anirudh Ravichander (@anirudhofficial) August 10, 2023
Nelsaaa ???
- துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
- இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.
துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகயிருந்த நிலையில் இயக்குனர் சித்திக் மறைவயடுத்து டிரைலர் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது.
- இப்படத்தை தனுஷ் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் பார்த்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்துள்ளார். ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த தனுஷை ஆரவாரம் செய்து ரசிகர்கள் வரவேற்றனர்.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது.
- ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடன் சென்னை திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுற கொடுக்க நூறு பேரு என்ற வரிகளை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'.
- இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'.
- இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

நடிகர் ரஜினி 'மாவீரன்' படத்தை பார்த்துவிட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ரூ.89 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
'மாவீரன்' திரைப்படம் வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'குஷி'.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குஷி
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
- கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் 'ஜென்டில்மேன்-2' திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார்.
1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து சமீபத்தில் 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றுகிறார்.

ஜென்டில்மேன்-2 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜென்டில்மேன்-2' திரைப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.






