கல், மண், காதல் இருக்கும் வரை என்னைக்கும் சூப்பர் ஸ்டார்தான்.. கனல் கண்ணன் பேச்சு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியானது.ஜெயிலர் படத்தை பார்த்த பிறகு சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
கல், மண், காதல் இருக்கும் வரை என்னைக்கும் சூப்பர் ஸ்டார்தான்.. கனல் கண்ணன் பேச்சு
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் திரையரங்கம் ஒன்றில் ஜெயிலர் படம் பார்த்த சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, படம் நல்லா இருக்கு, இயக்குனர் நெல்சன், ரஜினி சாருக்கு வாழ்த்துக்கள். கல், மண், காதல் இருக்கும் வரை என்னைக்கும் சூப்பர் ஸ்டார்தான் நம்பர் ஒன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com