ஜெயிலர் படம் பார்க்க திரையரங்கம் வந்த இயக்குனர் நெல்சன்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது.இப்படம் பார்க்க இயக்குனர் நெல்சன் திரையரங்கு வந்துள்ளார்.
ஜெயிலர் படம் பார்க்க திரையரங்கம் வந்த இயக்குனர் நெல்சன்
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படம் பார்க்க சென்னை சத்யம் திரையரங்கிற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com