என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'குஷி'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் எந்த தமிழ் இயக்குனருடன் பணியாற்ற ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, வெற்றிமாறன், பா.ரஞ்சித், கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கூறினார்.

    • இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வந்த இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என் இதயம் கனக்கிறது. சித்திக் சாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் நான் நிற்கிறேன்.

    'பிரண்ட்ஸ்' திரைப்படம் எனக்கு பல வழிகளில் முக்கியமான திரைப்படம். படப்பிடிப்பின் போது நடிப்பில் சிறிய முன்னேற்றம் செய்தாலும் நடிகர்களைப் பாராட்டுவார். படப்பிடிப்பைத் தாண்டி எடிட் செய்யும் போதும், எனது நடிப்பு குறித்த தனது கருத்துகளை அன்புடன் தெரிவிப்பார்.


    சூர்யா பதிவு

    'பிரண்ட்ஸ்' படம் பண்ணும்போது அவர் புகழ்பெற்ற மூத்த இயக்குனர். ஆனால் அவர் தனது நட்பு அணுகுமுறையால் படப்பிடிப்பின் போது அனைவரையும் சமமாக நடத்துவார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ குரலை உயர்த்தியோ நான் எப்போதும் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் நான் விரும்பும் அனுபவம். நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பே என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். என்னையும் என் திறமையையும் நம்புவதற்கான உள்நம்பிக்கையை அவர் கொடுத்தார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் என் குடும்பத்தை பற்றி விசாரிப்பார்.

    நடிகராக நான் உருவாகும் ஆண்டுகளில் என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி சார். நான் உங்களை மிஸ் செய்கிறேன். நீங்கள் கொடுத்த அன்பும் உங்கள் நினைவுகளும் எங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • விஜய் தேவரகொண்டா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’.
    • இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், 'ரோஜா சினிமா மாதிரி இருக்கு காஷ்மீர்' போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.




    • 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றது.
    • இதனையடுத்து பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளி உலக அளவில் புகழ்பெற்றனர்.

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தாயை பிரிந்து வந்த ரகு, பொம்மி ஆகிய 2 குட்டி யானைகளை பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் பராமரித்து வளர்த்து வந்தனர்.

    இதையறிந்த கார்த்தகி கொன்சால்வேஸ் என்ற பெண் இயக்குனர் 2 குட்டி யானைகளை வளர்த்த விதம் உள்ளிட்ட அனைத்தையும் 2 ஆண்டுகளாக வனப்பகுதியில் தங்கி 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் ஆவணபடமாக எடுத்தார். இந்த படத்தின் காட்சிகள் சிறப்பாக இருந்ததன் காரணமாக படக்குழுவினர் இதனை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினர். அங்கு இந்த ஆவணப்படம் எல்லோராலும் பாராட்டப்பட்டு சிறந்த ஆவணப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதினை பெற்றது.

    இதனையடுத்து பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளி உலக அளவில் புகழ்பெற்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் முதுமலைக்கு வந்து, பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாகன் தம்பதியை சென்னைக்கு அழைத்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து பாராட்டினார்.

    இந்த நிலையில் ஆவணப்படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் படம் முடிந்ததும், தங்களுக்கு வீடு, நிலம், பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக பாகன் தம்பதி புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாகன் தம்பதியினர் கூறியதாவது:-

    இரவு, பகல் பாராமல் வனப்பகுதிக்குள் சென்று அவர்கள் கூறியபடி நாங்கள் நடித்து கொடுத்தோம். வயதான காலத்தில் எங்களுக்கு நடக்க கூட முடியாத நிலையிலும் கஷ்டத்தை பொறுத்து கொண்டு, காடு, மேடு என அலைந்து அவர்கள் கூறியபடி அனைத்தையும் செய்தோம்.

    ஆவணப்படம் முடிந்ததும் எங்களுக்கு வீடு, பணம், நிலம், பேரக் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் எதுவுமே கடைசிவரை தரவில்லை. இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டால் நான் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். உங்கள் வங்கி கணக்கில் பணம் போட்டு விட்டேன் என்கிறார். அதனை நம்பி நாங்களும் எங்களது வங்கி கணக்கில் சென்று பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. பணம் போட்டுவிட்டதாக கூறி ஏமாற்றுகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்து கொள்வார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரவீன்ராஜ் என்பவர் பொம்மன்-பெள்ளி தம்பதியை அழைத்து சென்று, அவர்களின் பிரச்சினை குறித்து முகமது மன்சூர் என்ற வக்கீலிடம் பேசினார். இதனை தொடர்ந்து 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு வக்கீல் முகமது மன்சூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரவீன்ராஜ் கூறியதாவது:-

    இந்த ஆவணப்படம் எடுக்க பொம்மன்-பெள்ளி தம்பதி பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவில் வீடு, பணம், பேரன்களுக்கு படிப்பு கொடுப்பதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆஸ்கர் விருது என்பது அதில் நடித்த யானை, பூனை என எல்லோருக்கும் சொந்தமானது தான். அந்த ஆஸ்கர் விருதை 2 நாட்கள் பொம்மன் வீட்டில் வைத்திருக்கலாமே.

    அப்படி என்ன தீண்டத்தகாதவர்களா அவர்கள். ஆஸ்கர் விருது கிடைத்ததன் மூலமாக தயாரிப்பாளர், இயக்குனருக்கு ரூ.7 கோடி வரை பணம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆவணப்படத்தின் மூலமாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை பொம்மன்-பெள்ளிக்கு கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் அதனை செய்யவில்லை. வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளனர். இப்போது தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை.

    இதையடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரின் முகவரிக்கும், மெயிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதேபோல் ஆஸ்கர் விருது குழுவுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாயோன்.
    • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடன் ஜூன் மாதன் வெளியான திரைப்படம் மாயோன். இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருந்தார். இதனை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.



    பழங்கால கோவில் ஒன்றை சுற்றி நடக்கும் கதைக்களமாக உருவாகியிருந்த 'மாயோன்' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'மாயோன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் வெளியாகும் ஓடிடி தளம் குறித்து அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    • நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது.
    • இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.

    நடிகர் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15-வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.


    கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். மேலும், சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.

    கே. ஜி. எப் படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் துவங்கியது. இதில், சத்யராஜ் ,நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.


    லால் சலாம் படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • நடிகர் பிரகாஷ் ராஜ் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் பா.ஜ.கவை பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறார்.

    கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பிரகாஷ் ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.கவையும் பிரதமர் நரேந்திர மோடியும் விமர்சித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.


    இந்நிலையில். கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதனை அறிந்த மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாகத்திற்குள் நடத்தலாம் என கேள்வி எழுப்பியதோடு, நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கல்லூரிக்கு வரக்கூடாது என போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையாமல் இருக்க தடுப்பு அமைத்து பாதுகாப்பில் ஈடுப்பட்டதால் மாணவர்களுக்கு போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரியை விட்டு வெளியே சென்றதும் மாணவர்களில் சிலர் கோமியம் எடுத்து சென்று அவர் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அடியே'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.



    இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர்வெங்கட் பிரபு பேசியதாகவது, " உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நான் திரைப்பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்லும் போதே மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது. கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன் என்று இன்னும் அவருக்கு தெரியாது.  அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவராக நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தான். அவர் ஒரு பல குரல் வித்தகர்.

    இந்த திரைப்படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒன்று விஞ்ஞானியாகவும், மற்றொன்று கெளதம் வாசுதேவ் மேனனாகவும் நடித்திருக்கிறேன். இரண்டுமே சிரமமான கதாபாத்திரங்கள் தான். இந்த திரைப்படத்தில் நான் விஜய் சார் படத்தை இயக்கி விட்டதாக கதையில் வரும். இந்த விளம்பரம் வெளியான பிறகு தான் எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தயாரிப்பாளரை முதன்முதலாக அவரது வீட்டில் சந்திக்கும் போது எனக்கு தெய்வீக அனுபவம் தான் ஏற்பட்டது.



    நான் இந்த படத்தில் நடிக்கும் போது ஜி.வி.பிரகாசுடன் தான் நடித்தேன். இதற்காக படப்பிடிப்பு தளத்தில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரைப் பற்றிய பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன். நல்ல மனதுக்காரர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் ஜோதிட கலையிலும் வித்தகராக இருக்கிறார். எனக்கு அவர் சொன்ன ஜோதிடம் பலித்தது.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்தில் கடினமான எப்போதும் குழப்பத்தில் இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சியில் குழப்பமான மனநிலையில் நடித்து முடித்தவுடன்.. ஓய்வு கிடைக்கும் போது படப்பிடிப்பு தளத்திலேயே தொலைபேசி மூலம் இசை குறிப்புகள் குறித்து பேசுவார். பன்முக திறன் படைத்த கலைஞர். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்.. உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

    • இயக்குனர் சித்திக் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.
    • இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    சித்திக்

    இந்நிலையில், நடிகர் சரத்குமார், இயக்குனர் சித்திக்கிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரபல மலையாள இயக்குனரும், தமிழில் சிறந்த படங்களை இயக்கியவரும், சிறந்த திரைப்பட எழுத்தாளருமான சித்திக் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. திரைத்துறைக்கு ஈடில்லா இழப்பை ஏற்படுத்தி மறைந்த சித்திக் பிரிவால் வேதனையில் வாடும், அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'.
    • இப்படத்திற்காக ரஜினி சிவகார்த்திகேயனை பாராட்டியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

    மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.



    இந்நிலையில், நடிகர் ரஜினி 'மாவீரன்' படத்தை பார்த்துவிட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மாவீரன்' திரைப்படம் வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
    • அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை ரஜினிகாந்த் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்புடன் சென்றார்.

    அப்போது அவருக்கு முன்னால் வரிசையில் பலர் நின்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் போலீசார் ரஜினியிடம் முன்னால் சென்று விடலாம் என கூறி அழைத்துச் சென்றனர். அப்போது ரஜினி, வரிசையில் நிற்பவர்களை பார்த்து "ரொம்ப நேரமா நிற்பீங்க... சாரி" என கூறி விட்டு சென்றார்.

    இதையடுத்து அங்கு நின்றவர்கள் பரவாயில்லை என்று கூறி புன்னகைத்து ரஜினியை அனுப்பி வைத்தனர்.

    ×