என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பாபாஜி குகையில் தியானம் செய்வது தனக்கு மிகுந்த மன நிறைவையும் நிம்மதியையும் தருவதாக ரஜினிகாந்த் பலமுறை தெரிவித்துள்ளார்.
    • பயணத்தின் போது தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக உதவியாளர் ஒருவரை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றுள்ளார்.

    சென்னை:

    சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது. கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு செல்வதை ரஜினி தவிர்த்து வந்தார். இமயமலை பயணத்தையும் அவர் ஒத்தி வைத்திருந்தார்.

    "அண்ணாத்த" படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார். அந்த பயணம் குறுகிய கால ஆன்மீக யாத்திரையாக இருந்தது.

    அவர் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்த படம் ரஜனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து மீண்டும் இமயமலை பயணத்தை தொடங்க ரஜினி முடிவு செய்தார்.

    அதன்படி இன்று (புதன்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை தொடங்கினார். இன்று காலை 8 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். ஆனால் அவர் விரிவாக பதில் அளிக்க மறுத்து விட்டார். ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார்.

    இமயமலையில் ஒரு மாதம் வரையில் தங்கி இருக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று ஓய்வு எடுப்பதையும் அங்கு சாதாரண மனிதர்களை போல் காவி வேட்டியுடன் சுற்றி திரிவதையும் அதிகம் விரும்புவார்.

    அந்த வகையில் தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அங்கு எப்போதும்தான் தங்கும் விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கிறார். இந்த விடுதி ரஜினியால் கட்டப்பட்டதாகும்.

    ரஜினிகாந்த் தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது சித்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தனது ஆன்மீக குருவான பாபாஜி குகைக்கு சென்று வழிபடவும் முடிவு செய்துள்ளார். மேலும் அவர் ரிஷிகேஷ், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த நேரங்களில் எல்லாம் ரஜினிகாந்த் நினைத்த இடங்களுக்கு எப்போதும் சென்று சராசரி மனிதர்களை போல வாழ்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்போதைய சுற்றுப்பயணத்தையும் மன அமைதியுடன் ரஜினி மேற்கொள்ள உள்ளார்.

    இதற்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்த போது குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்தார். டீ கடையில் நின்று அங்கிருந்தவர்களுடன் பேசிக்கொண்டே டீ குடித்தார். இந்த புகைப்படங்கள் எல்லாம் அப்போது வெளியாகி வைரலாக பரவியது. அவரது எளிமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. தற்போதைய இமயமலை சுற்றுப் பயணத்தின் போதும் ரஜினிகாந்த் அது போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முடிவு செய்துள்ளார்.

    ரஜினிகாந்தை பொறுத்த வரையில் கடவுள் மீது அதிகம் பக்தி கொண்டவர். தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதை அதிகம் விரும்பினார். பின்னர் ராகவேந்திரா சுவாமிகள் மீது அவருக்கு பக்தி ஏற்பட்டது. ராகவேந்திரர் வேடத்தில் நடித்த அவர் ராகவேந்திரருக்கு ஆலயங்கள் கட்டுவதற்கும் பலருக்கு உதவி உள்ளார்.

    இந்த நிலையில் இமயமலையில் இன்றும் உயிரோடு இருப்பதாக கருதப்படும் பாபாஜி பற்றி ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாபாஜி பற்றி மேலும் அறிந்து கொள்ள அவர் இமயமலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் பிறகு பாபாஜியை தனது ஆன்மீக வழிகாட்டியாக ரஜினி ஏற்றுக் கொண்டார்.

    இமயமலை பயணத்தின் போது அங்குள்ள பாபாஜி குகைக்கு சென்று தினமும் தியானம் செய்ய ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இமயமலையில் உள்ள சாமியார்களையும் ரஜினி சந்திக்கிறார்.

    பாபாஜி குகையில் தியானம் செய்வது தனக்கு மிகுந்த மன நிறைவையும் நிம்மதியையும் தருவதாக ரஜினிகாந்த் பலமுறை தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் இந்த தியானமும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஒரு தடவை அவர் மனைவி லதாவுடன் சென்று பாபாஜி குகையில் தியானம் செய்து இருக்கிறார். மீண்டும் அதுபோல அனுபவத்தை பெறவே தனது தற்போதைய இமயமலை பயணத்தையும் அமைத்துக் கொள்ள ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

    இமயமலையில் தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை தினமும் மேற்கொள்ள ரஜினி முடிவு செய்திருக்கிறார்.

    இந்த பயணத்தின் போது தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக உதவியாளர் ஒருவரை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றுள்ளார். கடந்த முறை நண்பர் ஒருவருடன் இமயமலை பயணத்தை ரஜினி மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் "ஜெயிலர்" படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து விட்டு கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஒரு மாத கால இமயமலை பயணம் முடிந்த பின்னர் அடுத்த மாதம் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் 200-வது நாள் விழா நடைபெற்றது.
    • இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் 200-வது நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது, அரசியல்வாதிகள் தங்களது பெருமைகளை பேசுவதற்காக சினிமா துறையை விமர்சனம் செய்ய வேண்டாம்.

    மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது,மாநில வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்பு உருவாக்குவது, சாலைகள் அமைப்பது, உள்கட்டமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் தான் மக்கள் பாராட்டை பெறுவீர்கள். அதை விட்டுவிட்டு சினிமா துறை குறித்து தேவையற்ற விமர்சனம் செய்ய வேண்டாம் என்றார்.

    சிரஞ்சீவி பேச்சுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் நடித்து வெளியான ப்ரோ திரைப்படம் குறித்தும், நடிகர் பவன் கல்யாண் குறித்தும்,அந்த படம் எடுப்பதற்கு கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டது எனவும், அதன் வருவாய் குறித்தும் ஆந்திர மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் அம்படி ராம்பாபு மற்றும் அமைச்சர்கள் சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சிரஞ்சீவி பேச்சு உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பரம்பொருள்.
    • இப்படத்தின் மூலம் முதல் முறையாக அனிருத் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளார்.

    அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பரம்பொருள். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.



    இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்தனர்.
    • இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

    பிரபல மலையாள இயக்குனரான சித்திக் (வயது 63) கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். நோய் தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  

    அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இயக்குனர் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சித்திக் இன்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

    இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.

    • ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'அடியே'.
    • இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

    ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், "விஷாலை நான் பொறுக்கி என சொன்னதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். விஷாலும் நான் துரோகத்தை மறக்கவே மாட்டேன் என்கிறார். அப்படி நான் என்ன துரோகம் செய்தேன் எனத் தெரியவில்லை. விஷால் என் இதயத்துக்கு நெருக்கமானவர். அவருக்கும் எனக்கும் சண்டை நடந்தது.


    நான் அவரை மிஸ் செய்கிறேன். அவர் என்னை மிஸ் செய்ய மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு ஈகோ அதிகம். எனக்கும் ஈகோ இருக்கிறது ஆனால் மேனெஜ் செய்துகொள்வேன். பொறுக்கி என்பது நான் கோபத்தில் சொன்ன வார்த்தை. ஆனால் விஷால் அப்படியில்லை. அவர் ஸ்வீட் பாய். விஷாலுடன் இனி படம் பண்ணவே மாட்டேன். கெஞ்சிக் கொண்டிருக்கமாட்டேன். அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவம்" என்றார்.

    • தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு.
    • இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    முருகன் மீது அதீத பக்தி கொண்ட நடிகர் யோகிபாபு அடிக்கடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் இவர் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது யோகிபாபு அங்கிருந்த அர்ச்சகருக்கு கை கொடுத்தார். ஆனால், அந்த அர்ச்சகரோ, யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலர் யோகிபாபு தீண்டாமையை எதிர்கொண்டதாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.


    வைரலாகும் புகைப்படம்

    இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதற்கு விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், "12 வருடங்களுக்கு மேலாக சிறுவாபுரி கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு அந்த அர்ச்சகரை அப்போதிலிருந்தே தெரியும். அவர் ரொம்ப நல்ல மனிதர். யாரோ வேண்டுமென்றே இவ்வாறு தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். இதில் சாதி எல்லாம் பார்க்க வேண்டாம். அர்ச்சகரால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை. அவர்கூட நான் கைக்குலுக்கப் போகவே இல்லை. டாலர் பத்திதான் விசாரித்தேன். அந்த வீடியோவை நல்லா பார்த்தாலே இது தெரியும்." என்று கூறியுள்ளார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • இதில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடியே'.
    • இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், "ஒரு இயக்குனருக்கு யாரையும் விமர்சிக்கவும் நகைச்சுவை கதாபாத்திரமாக காண்பிக்கவும் முழுக்க முழுக்க உரிமை இருக்கு. தமிழ் சினிமாவில் நிறைய பேர் தெரியாத்தனமாக கதை எழுதும்போது ஒருவருக்கு ஒரு பெயர் வைத்துவிடுகிறார்கள். அதற்கு இயக்குனர் மேல் கேஸ் போடுவார்கள். எந்த இயக்குனரும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்வதில்லை.


    நான் இப்போது எழுதி முடித்துள்ள கதையில் ஒரு கேரக்டருக்கு பெயர் வைக்க 15 நிமிஷம் யோசித்தேன். அப்புறம் யுவராஜ் என்று வைத்தேன். முதலில் இளையராஜா என்று யோசித்தேன். ஆனால் அது கேஸ் ஆகிடும். எங்க அப்பா தான் அவரு. இருந்தாலும் அவர் கேஸ் போட்டுவிடுவார். என்னை எப்படி வேண்டுமானாலும் காட்டுங்கள், மோசமானவனாகவும் காட்டுங்கள். உண்மையில் நான் மோசமானவன் தான். அதற்கு முழு சுதந்திரம் இருக்கு. ஒரு இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்" என்று பேசினார்.

    • ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’.
    • இப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.


    மல்டிவெர்ஸ் சையின்ஸ் பிக்ஷன் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது வைலாகி வருகிறது.

    'அடியே' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • நடிகை ரைசா பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவரின் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த 'வர்மா', 'காபி வித் காதல்' போன்ற படங்களிலும் நடித்தார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.


    ரைசா பதிவு

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கு நடிகை ரைசா தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கையில் காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் அவர், 'தெரு பூனை விளையாடும் போது கடிப்பது வீட்டு பூனை மாதிரி இருக்காது' என்று பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்த் சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் வசித்து வருகிறார்.
    • சிறுமி ஒருவர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று நள்ளிரவில் கதவை தட்டினார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போயஸ்கார்டன் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் வசித்து வருகிறார். அவரை பார்க்கும் ஆசையில் வெளியூர்களில் இருந்து பலர் சென்னை வந்து அவரது வீட்டுக்கு செல்வதுண்டு. இதுபோன்ற நபர்களை போலீசார் மீட்டு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம், பெத்த நாயக்கம் பாளையம், சமுத்திரம் காலனி பகுதியில் வசித்து வரும் ராமர் என்பவரது மகளான தீபிகா என்ற ஹரினி, ரஜினியை பார்ப்பதற்காக வீட்டில் பொய் சொல்லி விட்டு சென்னைக்கு வந்துள்ளார். 15 வயது சிறுமியான அவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலையில் தனது வீட்டில் இருந்து புறப்பட்ட தீபிகா ஆசிரியர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறியுள்ளார்.

    பின்னர் அவர் சேலத்தில் இருந்து பஸ் ஏறி சென்னை வந்தார். கோயம்பேட்டில் இருந்து போயஸ்கார்டன் பகுதிக்கு ஆட்டோவில் சென்று இறங்கிய சிறுமி தீபிகா, ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று நள்ளிரவில் கதவை தட்டினார். ரஜினிகாந்தின் வீட்டு காவலாளி கதவை திறந்து பார்த்தார். அப்போது வெளியில் சிறுமி நிற்பதை பார்த்து விசாரித்த காவலாளி இதுபற்றி தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவி தீபிகாவை மீட்டனர். பின்னர் சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது பல்லாவரம் பம்மல் பகுதியில் பாட்டி சின்னபொன்னு வசித்து வருவது தெரியவந்தது. அவரிடம் சிறுமியை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பாட்டி சின்ன பொன்னு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து தீபிகாவை அழைத்துச் சென்றார். போலீசார் அறிவுரை கூறி சிறுமியை பாட்டியுடன் அனுப்பி வைத்தனர்.

    • டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.
    • தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

    தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெரிதானது.



    இவர் நடிப்பில் வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ரம்யா பாண்டியன் மலையாளத்தில் நன்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.



    அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ரம்யா பாண்டியன், தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து தற்போது வைரலாகி வருகிறது.


    ×