என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வான் மூன்று’.
    • இப்படம் வருகிற 11-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வான் மூன்று'. சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபீல் குட் லவ் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.


    இதில், இயக்குனர் முருகேஷ் பேசியதாவது, "வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே 'வான் மூன்று' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்த கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்த கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லோரும் வந்தார்கள். ஆனால், சித்ரா கேரக்டருக்கு லீலா மேம் தவிர்த்து, வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. இவர்தான் வேண்டும் என்று ஒரு மாதம் ஃபாலோ செய்து ஒத்து கொள்ள வைத்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கினேன்" என்று பேசினார்.


    நடிகை லீலா தாம்சன் பேசியதாவது, "இயக்குனர் இந்த கதை சொன்னபோது எனக்கு முதலில் புரியவில்லை. நேரில் சந்தித்து கதை சொன்ன போதுதான் நான் ஒத்துக்கொண்டேன். இந்தப் படத்தில் புதியவர்கள் போலவே அனுபவம் வாய்ந்தவர்களும் வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்களுடனும் டெல்லி கணேஷ் சாருடனும் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என்றார்.


    நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது, "இந்த கதை கேட்டபோது நான் எதிர்பார்த்தபடி, என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதுவும் இல்லாமல் இந்த அணியினர் மிகவும் திறமையானவர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால் தைரியமாக ஒத்துக்கொண்டேன்" என்றார்.

    • மலையாளம், தமிழ் என பல மொழி படங்களை இயக்கியவர் சித்திக்.
    • இவர் விஜய்யின் ‘காவலன்’ திரைப்படத்தை இயக்கினார்.

    பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.


    சித்திக்

    கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் சித்திக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இயக்குனர் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம் ஆண்டில் 'காலா', '2.0' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார்.



    இந்நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் இமயமலை பயணத்தை கையில் எடுத்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம், நாளை மறுதினம் (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இமயமலை புறப்பட உள்ளார். படத்தின் முதல் காப்பியை ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) பார்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் இன்று இரவோ அல்லது நாளை காலையோ அவர் இமயமலை நோக்கி புறப்படுவார் என்று கூறப்படுகிறது.

    • நடிகர் சிரஞ்சீவி தற்போது ‘போலா ஷங்கர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015-ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு 'போலா ஷங்கர்' என பெயரிடப்பட்டு உள்ளது.


    இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி, 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, எமோஷன் வேணுமா எமோஷன் இருக்கு' என தயாரிப்பாளர் தில் ராஜு பாணியில் படத்தை புரொமோஷன் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'வாரிசு' திரைப்படத்தின் புரொமோஷனின் போது தயாரிப்பாளர் தில் ராஜு 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு' என இப்படத்தை புரொமோஷன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்ரம், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தெய்வதிருமகள்.
    • இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தெய்வதிருமகள். விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்பாக்கும் மகளுக்கும் உள்ள பிணைப்பை மையப்படுத்தி வெளியான இப்படம் பலரையும் உருக வைத்தது. குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் அதில் இடம்பெற்ற ஜிவி பிரகாஷின் இசையும் இன்றளவும் கண்கலங்க வைக்கும் காட்சியாக உள்ளது.



    இந்நிலையில் தெய்வதிருமகள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்த நபர் ஒருவர் தேம்பி தேம்பி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 



    • நடிகர் ஃபகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
    • இயக்குனர் மாரி செல்வராஜ், ஃபகத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்தினவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    ஃபகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இயக்குனர் மாரி செல்வராஜ், ஃபகத் பாசிலுக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.


     

    அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.




    மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார் என்று பதிவிட்டுள்ளார்.



    • 'சந்திரமுகி -2' திரைபடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை கீரவாணி கொடுத்துள்ளார். அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் பின்னணி இசையில் தீவிரமாக ஈடுப்பட்டிருக்கும் கீரவாணி 'சந்திராவுக்கு பின்னணி இசையமைத்துவிட்டேன். முகிக்கு இன்றைக்கு ஆரம்பிக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம் கதாநாயகியா அறிமுகமானவர் நடிகை சுரபி.
    • தற்போது “டிடி ரிட்டர்ன்ஸ்” படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம் கதாநாயகியா அறிமுகமானவர் நடிகை சுரபி. அதன்பின்னர் வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் "டிடி ரிட்டர்ன்ஸ்" படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படம் வெற்றி குறித்து நடிகை சுரபி கூறும்போது, டிடி ரிட்டர்ன்ஸ் அமோக வெற்றிக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். திரையரங்கில் முதல் நாள் பார்வையாளர்களுடன் படத்தை பார்க்கும் போது அவர்களின் சிரிப்புகள், கைத்தட்டல்கள் மற்றும் விசில்கள் ஆகியவற்றைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.



    இது என்னுடைய முதல் ஹாரர் காமெடி படம். ஒரு நடிகராக, இது சவாலாகவும் கற்றல் அனுபவமாகவும் இந்த படம் இருந்தது. பேய் வீடுகளில் இரவும் பகலும் படமெடுத்தது பரபரப்பான அனுபவமாக இருந்தது. மேலும் நான் ஒரு டெம்புள் ரன் விளையாட்டிற்குள் இருப்பது போல் உணர்ந்தேன்.

    சந்தானத்துடன் திரை இடத்தைப் பகிர்வது அருமையாக இருந்தது. அவர் ஒரு சிரமமில்லாத நடிகர், எப்போதும் செட்டில் அனைவரையும் சிரிக்க வைப்பார், இது அனைவருக்கும் வசதியாக இருந்தது. நாங்கள் அனைவரும் ஒரு சிறந்த குழுவாக வேலை செய்தோம். பார்வையாளர்கள் 'சுரபி ரிட்டர்ன்ஸ்' என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். தமிழில் அதிக படங்களில் நடிப்பதற்கும், சிறந்த வேலைகள் செய்வதற்கும், மறக்கமுடியாத கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் இது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. மீண்டும் கோலிவுட்டுக்கு வருவதில் மகிழ்ச்சி. என்னுடைய அடுத்த தமிழ் படம் ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அடங்காதே விரைவில் வெளியாகிறது என்றார்.

    • அல்லு அர்ஜுன் நடிப்பில் 'புஷ்பா 2' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் ஃபகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.



    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், நடிகர் பகத் ஃபாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'.
    • இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.



    சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் 'அடியே' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தை தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.



    'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் பரம்பொருள்.
    • இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.

    அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பரம்பொருள். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடல் இன்று வெளியாகும் என்று தெரிவித்து அந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×