சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படப்பிடிப்பின் புதிய தகவல்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படப்பிடிப்பின் புதிய தகவல்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தை தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com