வெற்றிமாறன், பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க விருப்பம் - விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'குஷி'.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
வெற்றிமாறன், பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க விருப்பம்  - விஜய் தேவரகொண்டா
Published on

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் எந்த தமிழ் இயக்குனருடன் பணியாற்ற ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, வெற்றிமாறன், பா.ரஞ்சித், கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com