தனுஷ் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்- விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'குஷி'.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
தனுஷ் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்- விஜய் தேவரகொண்டா
Published on

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குஷி

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com