என் மலர்
சினிமா செய்திகள்

கேஷுவலான லுக்கில் கமல்.. ட்ரெண்டாகும் இந்தியன்- 2 போஸ்டர்
- ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’.
- இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2 போஸ்டர்
இந்நிலையில், ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்ரை வெளியிட்டுள்ளது. கேஷுவலாக கமல் நிற்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
#INDIAN2 pic.twitter.com/rhStm6ISLD
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 15, 2023






