என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
இந்தியன் -2 படக்குழுவினருடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஷங்கர்
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.
- இவர் தற்போது இந்தியன்- 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் பிரமாண்ட இயக்குனராக வலம் வருகிறார். தன் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு இடத்தில் பிரமாண்டத்தை புகுத்தி 90-களில் இருந்து தற்போது வரை ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவரின் முதல் படமான 'ஜென்டில்மேன்' திரைப்படத்திலேயே 2டி அனிமேஷன் போன்றவற்றை பயன்படுத்தி தனக்கான இடத்தை உருவாக்கினார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் தற்போது கமல் நடிப்பில் 'இந்தியன் -2' திரைப்படத்தை இயக்கி வருகிறார். 27 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
ஷங்கரின் 60-வது பிறந்த நாளையொட்டி திரைப்பிரபலங்கள் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஷங்கர் 'இந்தியன் -2' படக்குழுவினருடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.