என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி மேன்’.
    • 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு 'லக்கி மேன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


    உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • பிக்பாஸின் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது.
    • இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.


    இந்நிலையில், 'பிக்பாஸ்' 7-வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் டீசர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




    • துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து 'கிங் ஆஃப் கோதா' படக்குழு புரோமோஷன் பணிகளிள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துல்கர் சல்மான், "ரஜினி தான் என்றும் ரியல் கிங் . 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு வந்த கூட்டத்துல ஒரு சதவீதம் என் படத்துக்கு வந்தாலே அது ரொம்ப பெரிய விஷயம்" என்று கூறியுள்ளார்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.


    அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 'மாமன்னன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50-நாட்களை கடந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது, இன்று மிக மகிழ்ச்சியான நாள். உதயநிதி இந்த 'மாமன்னன்' திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிவிட்டார். நான் எத்தனையோ நகைச்சுவை படம் செய்துள்ளேன். என் வாழ்நாளின் மொத்த படத்திற்கும் இந்த படம் சமமானதாக ஆகிவிட்டது. என்னால் மறக்க முடியாத படம். மாரி செல்வராஜ் கதை சொன்னபோதே அவரிடம் மிகப்பெரிய தெளிவு இருந்தது. 30 படத்திற்கான கதை அவரிடம் இருந்தது.


    இந்தப் படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைத்தது ஏ.ஆர் ரகுமான் தான் அவருக்கு நன்றி. இந்த படத்தில் பல காட்சிகள் என்னைத் தூங்கவிடவில்லை, உலுக்கி எடுத்துவிட்டது. ஒவ்வொரு காட்சியிலும் உயிர் இருந்தது. பலர் என்னை இப்படத்திற்காக அழைத்துப் பாராட்டினார்கள், மாரி செல்வராஜ் மேன்மேலும் வளர வேண்டும். அவர் நகைச்சுவை படம் எடுக்க வேண்டும். இந்த வாய்ப்பை தந்த ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு மிகப்பெரிய நன்றி. இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி என்று பேசினார்.

    • நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் 'கல்கி 2898- ஏடி' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


    இதைத்தொடர்ந்து, பிரபாஸ், இயக்குனர் மாருதி இயக்கத்தில் 'ராஜா டீலக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ராஜா டீலக்ஸ்' திரைப்படத்தில் நடிகை நிதி அகர்வால் இணைந்துள்ளார்.


    இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் மாருதி இது தொடர்பான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் மற்றும் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் உங்களை காணலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். 'ராஜா டீலக்ஸ்' திரைப்படத்தில் நிதி அகர்வால் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • நிகில் சித்தார்த்தின் 20-வது படத்தை பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார்.
    • இப்படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நிகில் சித்தார்த், ஹேப்பி டேஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், அவர் யுவதா, சுவாமி ராரா, கார்த்திகேயா, கார்த்திகேயா 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இயக்குனர் பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கத்தில் நிகில் சித்தார்த் நடித்த '18 பேஜஸ்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலைவையான விமர்சனங்களை பெற்றது.


    சுயம்பு போஸ்டர்

    இதைத்தொடர்ந்து நிகில் சித்தார்த்தின் 20-வது படத்தை மிஷ்கினிடம் பணியாற்றிய பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். 'சுயம்பு' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சுயம்பு' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    • நடிகர் வசந்த் ரவி வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வசந்த் ரவி. புகழ் பெற்ற நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலின் உரிமையாளார் முத்துகிருஷ்ணனின் மகனான இவர் இங்கிலாந்தில் மருத்துவராக புணிபுரிந்து வந்தார். பின்னர் நடிப்பு மீது கொண்ட காதலால் 2017-ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான 'தரமணி' திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். 'தரமணி' படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகளை பெற்றார்.


    தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான 'ராக்கி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் 'அஸ்வின்ஸ்' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.


    இவ்வாறு ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் வசந்த் ரவி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இவருக்கு மிகப்பெரிய மையில்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

    பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

    இந்நிலையில், 'கிக்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வழக்கமான சந்தானம் காமெடியுடன் உருவாகியுள்ள இந்த டீசரில் 'நான் இல்லாத போது என் ஆள் மேல கை வச்சயாமே' போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    'கிக்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.


    அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 'மாமன்னன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50-நாட்களை கடந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் என பலர் கலந்து கொண்டார்.


    இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜிடம் ரத்னவேலு கதாபாத்திரம் கொண்டாடப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "மாமன்னன் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று உருவாக்கப்பட்ட படம். இந்த படம் மக்களிடம் சேர்ந்துள்ளது. இந்த படத்தை கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. எல்லா படைப்புகளும் உருவாக்கப்பட்டது மக்களிடம் சேர்வதற்காக தான். ஒரு படம் என்பது நான்கு நாட்களில் முடிந்து போவது இல்லை. படங்கள் பேசப்பட்டு கொண்டே இருக்கும். அப்போது எல்லா கதாபாத்திரங்களும் நிறம் மாறும் அதன் நிலையை சென்று அடையும் உண்மையை பேசும். உண்மையை பேசுவதற்காக தான் படங்கள் உருவாக்கப்படுகிறது. படம் பார்க்க பார்க்க உண்மையை பேசிக் கொண்டே இருக்கும்" என்று பேசினார்.

    • நடிகர் ரஜினி சமீபத்தில் இமயமலைக்கு சென்றார்.
    • ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று ரஜினி சந்தித்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று துறவிகளை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி துறவிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.


    ரஜினி- சி.பி.ராதாகிருஷ்ணன்

    இதை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுப்பட்டார். இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து திரும்பிய ரஜினி, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.


    ராஞ்சி யோகதா சத்சங்க ஆசிரமத்தில் ரஜினி

    இந்நிலையில், ரஜினி ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்துள்ளார். மேலும், அந்த ஆசிரமத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கொலை’.
    • இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.

    இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    கொலை போஸ்டர்

    அதன்படி, 'கொலை' திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 18) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.




    • மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 'மாமன்னன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50-நாட்களை கடந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் என பலர் கலந்து கொண்டார்.


    இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, மாமன்னன் திரைப்படம் 20, 30 வருடமாக எனக்குள் இருந்த ஆதங்கம். என்னால் இசையில் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் யார் செய்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். வடிவேலுவின் ஒரு காட்சி பார்த்தேன் அப்போதே இந்த படத்தை சிறப்பாக பண்ணுவோம் என்ற முடிவு வந்துவிட்டது என்று பேசினார்.

    ×