உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்.. கவனம் ஈர்க்கும் யோகிபாபு பட டிரைலர்

நடிகர் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி மேன்’.'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்.. கவனம் ஈர்க்கும் யோகிபாபு பட டிரைலர்
Published on

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு 'லக்கி மேன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com