கண்காணிக்க தயாரான கேமராக்கள்.. பிக்பாஸ்-7 டீசரை பகிர்ந்த கமல்ஹாசன்

பிக்பாஸின் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
கண்காணிக்க தயாரான கேமராக்கள்.. பிக்பாஸ்-7 டீசரை பகிர்ந்த கமல்ஹாசன்
Published on

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், 'பிக்பாஸ்' 7-வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் டீசர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com