என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழ் படங்களுக்காக நிறைய கதைகளை கேட்டேன்.
- கதாபாத்திரத்தில் எனக்கு ஒரு தனி இடம் வேண்டும்.
'விழா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மேனன். தொடர்ந்து பேய் மாமா, அருவா சண்ட, நிஜமா நிழலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது:-
"பேய் மாமா படத்திற்கு பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தேன். தமிழ் படங்களுக்காக நிறைய கதைகளை கேட்டேன். வித்தியா சமான கதைக்காக காத்திருக்கிறேன். கதாபாத்திரத்தில் எனக்கு ஒரு தனி இடம் வேண்டும்.
தற்போது நான் நடித்து வரும் திலிப் டி 148 1970 களில் நடந்த உண்மை சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நான் நடித்துள்ள 13-ம் ராத்திரி ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழ் படங்களில் நடிப்பதற்கு என்று அதிக ஆசை எனக்கு உண்டு. 13-ம் ராத்திரி படம் நிறைய கதைகளை ஒன்றாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இதில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சமாளித்து வெளியில் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
நான் தைரியமான பெண். அதனால்தான் குருக்கன் படத்தில் ஜீப் ஓட்டுகிற காட்சிகளில் நான் தைரியமாக ஜீப் ஓட்டி சென்றேன். பெரிய கதாபாத்திரம், சின்ன கதாபாத்திரம் என்றில்லாமல் படத்துக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடிக்க வேண்டும். சினிமாவில் நிறைய மேடு பள்ளங்களை கடந்து வந்துள்ளேன். என் கனவே சிறிய வயதில் இருந்து சினிமாவில் நடிப்பதுதான். எனது குடும்பத்தில் உள்ள பொருளாதார சூழ்நிலையை சினிமாதான் சரி செய்கிறது" என்று கூறினார்.
- வரலாற்று பாணியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
- தனுஷ் நடிப்பில் அருண் மதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் நடிகர் தனுஷ் மீண்டும் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் அருண் மதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.
- திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் நடிகர் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- கவின் - மோனிகா திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான 'லிஃப்ட்', 'டாடா' போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர்களது திருமணம் நடந்துள்ளது.

திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் நடிகர் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். காமெடி நடிகர் புகழ் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். ரசிகர்களும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கவின் - மோனிகா திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார்.
- உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸூக்கு முன்பே இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு ரஜினி சென்றார்.
தொடர்ந்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் ஆகியோரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார்.
இதையடுத்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு பின் வெளியே வந்த ரஜினிகாந்த், "9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை. அதனால் இப்போது அவரை சந்தித்தேன்" என்றார்.
- கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.
- இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.
ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பிறகும் நடிகர்-நடிகைகளின் சம்பளம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சம்பளத்தின் மூலமாக அதிக சொத்துகள் சேர்த்த ஆசிய நடிகைகள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதில் சீனாவை சேர்ந்த பேன் பிங் பிங் என்ற நடிகை முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிக சொத்து மதிப்பு மட்டுமல்லாது, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவரே முன்னிலையில் உள்ளார். இவரது சம்பளம் 20 மில்லியன் டாலர். கடந்த 2018-ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததற்காக 3 மாதம் தலைமறைவாக இருந்த நடிகை பிங் பிங், பிறகு சமூகவலைதளத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக, 3 மற்றும் 4-வது இடங்களில் முறையே பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் உள்ளார்கள். இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.
- நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், 'லியோ' படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5-ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
- நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
- இப்படம் வெளியாகுவதற்கு முன்பே ரஜினி, இமயமலை சென்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு சென்றார்.

உத்தரப்பிரதேச துணை முதல் மந்திரியுடன் ரஜினி
தொடர்ந்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், நடிகர் ரஜினி உத்தரப்பிரதேச மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார். இவர்களுடன் லதா ரஜினிகாந்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
- தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் பவன்.
- இவரது இறுதி சடங்கு மாண்டியாவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
தமிழ், இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பவன். கார்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். பவனின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
25 வயதான நடிகர் பவனின் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், சின்னத்திரை நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர்(30) மாரடைப்பால் மரணமடைந்தார். தொடர்து கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கண்டநாள் முதல், மாநகரம், கசட தபற, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் சினிமா வாய்ப்பு கேட்டபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில் நான் சினிமாவில் நடிக்க வந்த போது பட வாய்ப்பு கேட்டு சிலரை அணுகினேன். அதில் ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம் என்றார்.

முதலில் அவர் சொன்னது எனக்கு புரியவில்லை. சம்பளம் விஷயம் பற்றி சொல்கிறார் என்று நினைத்து சரி எனது மானேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன். மானேஜர் பேசிய பிறகுதான் போன் செய்தவர் படுக்கைக்கு அழைக்கும் நோக்கில் என்னை கேட்டு இருக்கிறார் என்று புரிந்தது. அப்போது எனக்கு 20 வயது தான். சில நடிகைகள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கலாம். இன்னும் சில நடிகைகள் பெயர் வாங்க பொய் கூட சொல்வார்கள் என்று கூறினார்.
- கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஓப்பன்ஹெய்மர்'.
- இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
'அணுகுண்டின் தந்தை' என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'ஓப்பன்ஹெய்மர்'. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் 'உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்' என்ற பகவத் கீதை வரிகள் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
- நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு பல நகரங்களுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெறும் 'ஜவான்' பட புரொமோஷனில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு 'ஜவான்' திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்தி பரவி வந்த நிலையில் தற்போது விஜய் புரொமோஷனில் கலந்து கொள்வதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
- நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு இமயமலை சென்றார்.
- இவர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று அங்குள்ள துறவிகளை சந்தித்தார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம் ஆண்டில் 'காலா', '2.0' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார்.

ரஜினி- சி.பி.ராதாகிருஷ்ணன்
அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார். இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று துறவிகளை சந்தித்தார். தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுப்பட்டார்.

ஆனந்தி பென்- ரஜினி
இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த ரஜினிகாந்த் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்தித்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றுள்ளது.






