இந்தியாவில் வசூலில் அதிரடிகாட்டிய ஓப்பன்ஹெய்மர்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஓப்பன்ஹெய்மர்'.இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இந்தியாவில் வசூலில் அதிரடிகாட்டிய ஓப்பன்ஹெய்மர்
Published on

'அணுகுண்டின் தந்தை' என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'ஓப்பன்ஹெய்மர்'. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் 'உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்' என்ற பகவத் கீதை வரிகள் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com