என் மலர்
சினிமா செய்திகள்
- 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட பண்டி சரோஜ்குமார் திட்டமிட்டுள்ளார்.
- ‘பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்’ நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கி நடிப்பதோடு, இசை, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் பண்டி சரோஜ்குமாரே கவனிக்கிறார்.
2010 ஆம் ஆண்டு வெளியான 'போர்க்களம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பண்டி சரோஜ்குமார். மிரட்டலான மேக்கிங் மூலம் முதல் படத்திலேயே ஒட்டு மொத்த கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்ததோடு, பத்திரிகையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.
இதற்கிடையே, இயக்குநர் பண்டி சரோஜ்குமாரின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு "கலை எனது, விலை உனது" என்ற கருத்தோடு டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியான 'மாங்கல்யம்' என்ற திரைப்படத்தை இயக்கியதோடு, அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.
இயக்குநராக ஏற்கனவே பாராட்டு பெற்ற பண்டி சரோஜ்குமார், தற்போது நடிகராகவும் ரசிகர்களிடம் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, புதிய படம் ஒன்றை இயக்கி தயாரிப்பதோடு, அதில் நாயகனாகவும் நடிக்கிறார்.
'பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்' (BSK MAINSTREAM) என்ற நிறுவனம் சார்பில் பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படத்திற்கு 'பராக்ரமம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. "I ME MYSELF" என்ற டேக்லைன் கொண்ட 'பராக்ரமம்' படத்தின் தலைப்பை அசத்தலான டீசர் மூலம் பண்டி சரோஜ்குமார் அறிவித்துள்ளார்.

இந்த படத்தை நான் இயக்கி, தயாரித்து, நாயகனாக நடிப்பதோடு, இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் நானே செய்யப் போகிறேன். மேலும், என்னுடன் பல திறமையான புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்கள் என பண்டி சரோஜ்குமார் கூறினார்.
பண்டி சரோஜ்குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனாமிகா, கிரிட்டி, மோகன் சேனாபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
'பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்' நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கி நடிப்பதோடு, இசை, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் பண்டி சரோஜ்குமாரே கவனிக்கிறார்.
தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் பண்டி சரோஜ்குமார், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, அக்டோபர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
- நெகிழ்ச்சியான பற்பல அற்புத தருணங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது.
- ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருகிறது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொள்ளும் இசையமைப்பாளர்கள் பலருக்கு வாய்ப்பளித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நெகிழ்ச்சியான பற்பல அற்புத தருணங்கள் இந்நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் 30க்கு மேற்பட்ட பாடகர்கள், 13க்கும் மேற்பட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், 250க்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். இசைத்துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பதோடு, பல திறமையாளர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளது.
ஜூனியரில் பூவையார், நித்யஶ்ரீ, ஹரிப்பிரியா, பிரியங்கா, பிரகதி குரு பிரசாத் என பல திறமையாளர்கள் திரைத்துறையில் முன்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர்.
சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாடகர்கள் பூஜா வைத்தியநாத், சத்திய பிரகாஷ், திவாகர், செந்தில் கணேஷ், ரக்ஷிதா சுரேஷ், பூவையார், ஷாம் விஷால், சிவாங்கி, யோகி சேகர், ஆதித்யா RK தென்னிந்தியத் திரைத்துறையில் மிகச்சிறந்த முன்னணி பாடகர்களாகக் கோலோச்சி வருகின்றனர்.
மேலும் இசையமைப்பாளர் நடத்தும் வேர்ஃல்ட் டூர், வெளிநாட்டு இசைக்கச்சேரி, உள்நாட்டு இசைக்கச்சேரி என பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்களே பங்கு பெற்று வருகிறார்கள்.
திறமையாளர்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன், அவர்களுக்கு வாய்ப்புகளைக் குவித்துத் தரும், புகலிடமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது.
தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியிலும் பல நெகிழ்வான தருணங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் நிகழ்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் இசையமைப்பாளர் தமன். இந்நிகழ்ச்சியின் போது வரும் தீபாவளிக்குள் ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன்.
ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருகிறது.
- ரஜினிகாந்த் தனது பயணங்களை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்பினார்.
- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.
இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வந்தார்.
அப்போது, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளானது. பல்வேறு தரப்பினரிடையே இதுகுறித்து விமர்சனங்கள் எழும்பியது.
அதனைத்தொடர்ந்து அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அங்கு ராமர் தரிசனமும் செய்தார்.
ரஜினிகாந்த் தனது பயணங்களை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்பினார்.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய என்னை வாழ வைத்த செய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகின் அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வயது குறைவாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவேன்" என்றார்.
- விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடித்திருக்கும் புதிய படம் குஷி.
- விஜய் தேவரகொண்டாவின் குஷி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் முன்னணி நடிகையான சமந்தா உடன் இணைந்து நடித்திருக்கும் படம் 'குஷி' என்ற பெயரில் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத் வெளியிடுகின்றனர். இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நாயகன் விஜய் தேவரகொண்டா பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், '' என்னுடைய தமிழ் பையன்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் வணக்கம் . இந்தப் படத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்த குஷி திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும். உங்களை சிரிக்க வைக்கும். 'பெள்ளி சூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்'.. காலகட்டத்திலிருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. இந்த திரைப்படம் உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
- இயக்குனர் மனு ஆனந்த்-இன் முந்தைய படமான எஃப்.ஐ.ஆர். நல்ல வரவேற்பை பெற்றது.
- மிஸ்டர் எக்ஸ் படத்தில் கவுதம் கார்திக், மஞ்சிமா மோகன், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் இன்று துவங்கியதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய, இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவுடன் கவுதம் கார்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் மிஸ்டர் எக்ஸ் படமும் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. திபு நினன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு வின்சென்ட், கலை இயக்கம் ராஜீவன், படத்தொகுப்பை பிரசன்னா மேற்கொள்கின்றனர்.
ஆர்யா மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கும் காட்சி இன்று படமாக்கப்பட்டது. வரும் வாரங்களில் இந்த படம் தொடர்பான இதர அறிவிப்புகள் வெளியாகலாம். மனு ஆனந்த் கடைசியாக இயக்கிய எஃப்.ஐ.ஆர். படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மிஸ்டர் எக்ஸ் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.
- தளபதி 68 என்று அழைக்கப்படும் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பை தொடர்ந்து லியோ படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு, யாரும் எதிர்பாராத சமயத்தில் மிகவும் சர்பிரைசாக வெளியானது.

தற்போதைக்கு "தளபதி 68" என்று அழைக்கப்படும் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். லியோவை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்க துவங்கிவிட்டது. மேலும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற விவரங்கள் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பிரியண்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் 2024 வாக்கில் வெளியாக இருக்கிறது.
- இந்த படத்தின் மூலம் பெரிய நடிகருடன் வேலை செய்ய இருக்கிறேன்.
- அநீதி படத்திற்கு பிறகு கிடைத்த ஆதரவுக்கு நன்றி.
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்குகிறார். வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிராமாவாக உருவாகும் இந்த திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.

பூஜையை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது, ''இந்த படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய நடிகருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்."
"விஷால் வெங்கட் மதுரைக்கு வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி,'' என்று தெரிவித்தார்.
- ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.
- பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'அடியே'. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், '' அடியே என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை அளித்ததற்காக மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வித்தியாசமான படம். பேரலல்யுனிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்தியாவில் இதுவரை இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தப் படத்தின் கதை சிக்கலானது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுமையான ஒத்துழைப்பால், இப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் நன்றி.
என் வாழ்க்கையில் எப்போதும் எதிர்பாராமல் தான் அனைத்தும் நடந்திருக்கிறது. 96 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை போல்.. இந்த திரைப்படத்திலும் ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பொதுவாக கதைகளை கேட்டு பொறுமையாக தான் தேர்வு செய்து நடிப்பேன். ஆனால் அடியே படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதற்கு மற்றொரு காரணம் ஜீ. வி. பிரகாஷ் குமார். அவருடைய இசைக்கு நான் ரசிகை. அவருடைய இசைக்கு அனைவரும் ரசிகர்கள் என்றாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கும். அவருடன் இணைந்து நடித்தது மறக்க இயலாத வித்தியாசமான அனுபவம்.
இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் அவருடைய ரசிகையும் கூட அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறோம். இது வித்தியாசமாக இருந்தது,'' என்றார்.
- தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
- நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
நடிகை ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர். 2018-ம் ஆண்டில் 'தடாக்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அடுத்த கட்டமாக தெலுங்கு சினிமாவில் கால் பதித்து ஜூனியர் என்.டி.ஆர். உடன் ஒரு படத்தில்ஜோடி சேர்ந்து நடித்தார்.
இந்தநிலையில் ஜான்வி கபூர் கூறியதாவது:-
தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது. தற்போது டப்பிங் படங்கள் ஏராளமாக வருகின்றன. இதனால் மொழி ரசிகர்களுக்கு முட்டுக்கட்டையாக இல்லை. ஓ.டி.டி. தளங்கள் இருப்பதனால் நல்ல கதைகள் தலைப்புகள் கிடைக்கின்றன. அதை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறோம்.
நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் என்னால் நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து வருகிறேன். அப்போதுதான் என்னுடைய நடிப்பு திறமையை கண்காணிக்க முடியும். சினிமாவில் நல்ல முறையில் நடனம் ஆடவும், நகைச்சுவை பண்ணவும் ஆசை. எனது அம்மாவிற்கு தென்னிந்திய சினிமாவில் தான் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவருக்கு அங்கு அன்பும் கிடைத்தது. எனது தகுதியை நிரூபிக்க இதுதான் சரியான நேரம்.
இவ்வாறு அவர் கூறினார்
- ரொமான்ஸ் ஆகவும் சாக்லேட் பையனாகவும் ஏராளமான படங்கள் நடித்து விட்டேன்.
- அப்பாவின் எந்த படத்தின் ரீமேக்கிலும் நான் நடிக்க மாட்டேன்
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ள படம் கிங் ஆப் கோதா. படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சபீர், செம்போன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் விழா அடையாறில் நடந்தது.
விழாவில் பங்கேற்ற துல்கர் சல்மான் கூறியதாவது:-
கிங் ஆப் கோதா ஆக்ஷன் நிறைந்த படம். எனக்கு ஒரே மாதிரியாக படம் நடித்து போரடித்து விட்டது. ரொமான்ஸ் ஆகவும் சாக்லேட் பையனாகவும் ஏராளமான படங்கள் நடித்து விட்டேன். ரசிகர்களுக்கே சலிப்பை உண்டாக்கும். இந்தப் படம் ஆக்ஷன் படமாக எனக்கு அமைந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் வேறு விதமான கதைகளை தேடி நடித்துக் கொண்டிருக்கின்றேன். இனி எனது ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கும்.
உதாரணமாக "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படம் ரொமான்ஸ் திரில்லர் கலந்த கதை. வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்பாவின் எந்த படத்தின் ரீமேக்கிலும் நான் நடிக்க மாட்டேன். படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அந்த பாத்திரம் பேசப்படும். இப்போது எனக்கு பிடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி தான் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து மனித நேயம் உள்ள கதாநாயகனாக துல்கர் சல்மானை பிடிக்கும் என்று ஐஸ்வர்யா லட்சுமி பதில் அளித்தார்.
- நிலுவை தொகையை மீட்பதற்காக சன்னி தியோலுக்கு சொந்தமான பங்களாவை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- ங்களா வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என வங்கி தரப்பில் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
இந்தி நடிகர் சன்னி தியோல் நடித்து சமீபத்தில் வெளிவந்த கதார் 2 திரைப்படம் 'ஹிட்' ஆகி வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் சன்னிதியோலுக்கு சொந்தமாக மும்பை ஜூகு காந்தி கிராம் சாலையில் உள்ள பங்களாவை அவர் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்தார். அந்த பங்களாவுக்காக அவர் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கடன் வாங்கி இருந்தார்.
அந்த பணத்தை சன்னி தியோல் முறையாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ரூ.56 கோடிக்கு மேல் செலுத்தப்படாமல் நிலுவை தொகை இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து நிலுவை தொகையை மீட்பதற்காக சன்னி தியோலுக்கு சொந்தமான பங்களாவை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி அவரது பங்களா வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என வங்கி தரப்பில் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
சன்னி தியோலின் உண்மையான பெயர் அஜய்சிங் ஆகும். அஜய்சிங் பெயரில் தான் பங்களாவும் இருக்கிறது. எனவே அந்த பெயரில் ஏலம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் திடீரென ஏல அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பேங்க் ஆப் பரடோ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார்.
- ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார்.
இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேற்று முன்தினம் சந்தித்தார். இந்த நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார்.
அதனைத்தொடர்ந்து அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதாவும் தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், 'இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு தரிசனம் செய்தது எனது அதிர்ஷ்டம்' என்று கூறி சென்றார்.
பின்னர் ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அங்கு ராமர் தரிசனமும் செய்தார்.






