மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு..!

இயக்குனர் மனு ஆனந்த்-இன் முந்தைய படமான எஃப்.ஐ.ஆர். நல்ல வரவேற்பை பெற்றது. மிஸ்டர் எக்ஸ் படத்தில் கவுதம் கார்திக், மஞ்சிமா மோகன், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு..!
Published on

ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் இன்று துவங்கியதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய, இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவுடன் கவுதம் கார்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் மிஸ்டர் எக்ஸ் படமும் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. திபு நினன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு வின்சென்ட், கலை இயக்கம் ராஜீவன், படத்தொகுப்பை பிரசன்னா மேற்கொள்கின்றனர்.

ஆர்யா மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கும் காட்சி இன்று படமாக்கப்பட்டது. வரும் வாரங்களில் இந்த படம் தொடர்பான இதர அறிவிப்புகள் வெளியாகலாம். மனு ஆனந்த் கடைசியாக இயக்கிய எஃப்.ஐ.ஆர். படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மிஸ்டர் எக்ஸ் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com