என் மலர்
சினிமா செய்திகள்
- ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சந்திரமுகி- 2’.
- இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், 'சந்திரமுகி- 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் அன்பு இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார்.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். "வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.

சண்முக பாண்டியன் பட போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சண்முக பாண்டியன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை (ஆகஸ்ட் 25) விஜயகாந்தின் பிறந்த நாளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து விஜயகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எனது இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர், நாளை (25/08/2023) வறுமை ஒழிப்பு தினமான எனது பிறந்த நாளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
- லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'மோருணியே' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும்.
- இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா கதையம்சம் கொண்ட "ஹட்டி" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் திருநங்கையாக நடித்திருக்கிறார். இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. போஸ்டரின்படி நவாசுதீன் சித்திக் அடையாளம் காண முடியாத அவதாரத்தில் பார்த்த ரசிகர்கள், உண்மையில் இது அவர்தானா என ஆச்சரியத்தில் உள்ளனர்.

ஹட்டி குறித்து அனுராக் காஷ்யப் கூறும் போது, "ஹட்டியை உருவாக்க அக்ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக உதவி இயக்குநராக இருந்துள்ளார். இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது."
"ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும். மேலும் நீங்கள் இதுவரை பார்த்திராத உலகைக் காட்டும். இந்த புதிய உலகத்தில் நவாஸை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த படத்தின் வெளியீட்டிற்காக நான் காத்திருக்கிறேன், பார்வையாளர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
- ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- ஜெயிலர் படம் மூலம் இயக்குனர் நெல்சன் கம்பேக் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜாஃபர். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறார். அந்த வகையில், இவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார்.
இதனிடையே ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய விலை உயர்ந்த கண்ணாடியை கொடுக்கும் படி, கேட்டதாகவும், உடனே ரஜினி அந்த கண்ணாடியை தனக்கு பரிசாக கொடுத்துவிட்டதாகவும் ஜாஃபர் பதிவிட்டுள்ளார்.
மேலும் பதிவில் கண்ணாடியின் புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய கண்ணாடியை கேட்டதும் கொடுத்ததற்கு ஜாஃபர் நடிகர் ரஜினிகாந்த்-க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
- விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகிறது.
- மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார்.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.
மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாடல், "ஐ லவ் யு டி" வெளியிடப்பட்டது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
- தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான லியோ படத்தின், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து இருப்பது, பெரும் பொருட்செலவில் உருவாகி வருவது, விக்ரம் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் என பல்வேறு காரணங்களால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைக்கு தளபதி 68 என்று அழைக்கப்படும் இந்த படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரியன்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதவிர இந்த படத்தில் ஜோதிகா, மாதவன் மற்றும் பிரபு தேவா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தளபதி 68 படம் தொடர்பான அப்டேட்கள் லியோ படம் வெளியான பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்த போதும் தெரிவித்து இருந்தார்.
- மறுமணம் என்ற எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை.
- வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை வேண்டும்.
"தமிழில் புது நெல்லு புது நாத்து" படம் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகமான சுகன்யா, திறமையான நடிப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2002-ல் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். இந்த நிலையில் சுகன்யா மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து சுகன்யா கூறும்போது, ''கணவருடனான திருமண பந்தம் சரியாக பொருந்தவில்லை எனில் பெண்கள் அதில் இருந்து விலகிவிடுவது நல்லது. இந்த சமூகத்துக்கு கட்டுப்பட்டு எல்லாவற்றையும் சகித்து போவதால் பல தற்கொலைகள் அரங்கேறி இருக்கின்றன.
சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விண்ணப்பித்து பல ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது.
மறுமணம் என்ற எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை. அதற்காக மறுமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் சொல்லவில்லை. இன்னும் 2 மாதங்களில் 50 வயதை எட்டிவிடுவேன்.
இதற்கு பிறகு திருமணம் செய்து, குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா? அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? என்று குழப்பமாக இருக்கிறது. இது சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்றாலும், நடைமுறையில் சில விஷயங்களை எண்ணி பார்க்கத்தான் வேண்டியதுள்ளது.
வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை வேண்டும். எனவே மறுமணம் செய்வேனா? இல்லையா? என்பதை என்னால் சொல்லமுடியாது. என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அவ்வளவுதான்''என்றார்.
- சமந்தா திறமையான நடிகை. நான் சமந்தாவின் தீவிர ரசிகன்.
- மனைவியாக வரப்போகிறவரிடம் பழகி குணநலன்களை அறிந்து கொள்வது முக்கியம். காதலில்தான் அது சாத்தியம்.
தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய்தேவரகொண்டா. தெலுங்கில் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.
விஜய்தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள குஷி படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா சென்னையில் அளித்த பேட்டியில் கூறும்போது, " விஜய்யின் குஷி பட தலைப்பை எனது படத்துக்கு வைத்து இருப்பது மகிழ்ச்சி.
விஜய், விஜய்சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வம் உள்ளது. சமந்தா திறமையான நடிகை. நான் சமந்தாவின் தீவிர ரசிகன். அவருக்கு ஜோடியாக நடித்தது மகிழ்ச்சி. குஷி படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும். சிரிக்க வைக்கும்.
நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். மனைவியாக வரப்போகிறவரிடம் பழகி குணநலன்களை அறிந்து கொள்வது முக்கியம். காதலில்தான் அது சாத்தியம்.
பெண்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடாது. நான் பெண்களை மதிக்கிறேன். என்னை பெண்ணியவாதி என்று கேலி செய்வதால் வருத்தம் இல்லை. ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற நடிகர்கள் சினிமாவின் சகாப்தமாக இருப்பவர்கள். அவர்கள் படங்களை வெற்றி- தோல்வி என்ற வட்டத்துக்குள் அடக்கக்கூடாது''என்றார்.
- நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சென்னை:
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 23-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரபலங்கள், ரசிகர்கள் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் அடுத்த வாரம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 1,500 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சி தொடங்குவது மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மை 3 சீரிசை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கை ராஜேஷ் எம் இயக்கி இருக்கிறார்.
- மை 3 சீரிசில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஷாந்தனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஒ.டி.டி. தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் பிரிவில் உருவாக்கி இருக்கும் "மை3" என்ற சீரிஸ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஷாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி உள்ளிட்டோர் இந்த சீரிசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற காமெடி பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த சிரீசை இயக்கி உள்ளார்.
ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிசாக மை 3 உருவாகியுள்ளது. இந்த சீரிசுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன், அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்-இல் வெளியாக இருக்கும் "மை3" சீரிசை Trendloud நிறுவனம் தயாரித்து உள்ளது.
- சிரஞ்சீவி பிறந்தநாளில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
- மெகா 157 படத்தினை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தற்போதைக்கு "மெகா 157" என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் வசிஸ்தா இயக்குகிறார். இந்த படம் ஃபேன்டசி பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிரஞ்சீவி பிறந்தநாளில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
"மெகா 157" படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், பட அறிவிப்பிலேயே சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் "இந்த முறை, இது பிரபஞ்சத்தை மிஞ்சும் வகையில் மெகா மாஸ்-ஆக இருக்கும். ஐந்து சக்திகள் ஒன்றிணைந்து மெகாஸ்டார் ஆகிறது," என்று குறிப்பிட்டு இருக்கிறது.
இத்துடன் வெளியிடப்பட்டு இருக்கும் போஸ்டரில் ஐந்து சக்திகள்- நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் உள்ளிட்டவை ஆகும். இவை ஐந்தும் நட்சத்திர வடிவில் ஒன்றிணைந்துள்ளன. "மெகா 157" பட அறிவிப்பு வெளியாகி இருப்பதை ஒட்டி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்த படம் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.






