எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் மை3 சீரிஸ்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மை 3 சீரிசை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கை ராஜேஷ் எம் இயக்கி இருக்கிறார். மை 3 சீரிசில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஷாந்தனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் மை3 சீரிஸ்..  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
Published on

இந்தியாவின் முன்னணி ஒ.டி.டி. தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் பிரிவில் உருவாக்கி இருக்கும் "மை3" என்ற சீரிஸ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஷாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி உள்ளிட்டோர் இந்த சீரிசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற காமெடி பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த சிரீசை இயக்கி உள்ளார்.

ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிசாக மை 3 உருவாகியுள்ளது. இந்த சீரிசுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன், அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்-இல் வெளியாக இருக்கும் "மை3" சீரிசை Trendloud நிறுவனம் தயாரித்து உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com