ஷாருக்கான் பட விழாவில் கலந்து கொள்ளும் விஜய்.. உண்மை என்ன?

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஷாருக்கான் பட விழாவில் கலந்து கொள்ளும் விஜய்.. உண்மை என்ன?
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு பல நகரங்களுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெறும் 'ஜவான்' பட புரொமோஷனில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு 'ஜவான்' திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்தி பரவி வந்த நிலையில் தற்போது விஜய் புரொமோஷனில் கலந்து கொள்வதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com