search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாமன்னன் 20-30 வருஷமா எனக்குள் இருந்த ஆதங்கம்- மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான்
    X

    'மாமன்னன்' 20-30 வருஷமா எனக்குள் இருந்த ஆதங்கம்- மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான்

    • மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 'மாமன்னன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50-நாட்களை கடந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் என பலர் கலந்து கொண்டார்.


    இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, மாமன்னன் திரைப்படம் 20, 30 வருடமாக எனக்குள் இருந்த ஆதங்கம். என்னால் இசையில் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் யார் செய்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். வடிவேலுவின் ஒரு காட்சி பார்த்தேன் அப்போதே இந்த படத்தை சிறப்பாக பண்ணுவோம் என்ற முடிவு வந்துவிட்டது என்று பேசினார்.

    Next Story
    ×