என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ்.
    • இந்த நிறுவனம் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    தென்னிந்திய சினிமாவில் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருவது ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இந்த நிறுவனம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் பலரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


    சென்னை, வடபழனியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் ஸ்டுடியோவில் 'ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியம்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்பட தயாரிப்பு தொழில்நுட்ப கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரியமிக்க, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் காட்சிக்காக வைத்துள்ளனர்.


    இந்நிலையில், தற்போது இந்த மியூசியத்தில் நடிகர் அஜித்தின் பைக் இடம்பெற்றுள்ளது. அதாவது, 'திருப்பதி' படத்தில் அஜித் பயன்படுத்திய (பஜாஜ் பல்சர் 180சிசி 2004) பைக்கை மியூசியத்தில் இணைத்துள்ளதாக ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. திருப்பதி படத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் விஜய் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.
    • விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

    நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் நேரடியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து நலம் விசாரித்தார்.


    எஸ்.ஏ.சந்திரசேகர்- புஸ்சி ஆனந்த்

    இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தினை வெளியிட்டு 'பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்திற்கே வலிமை கூடுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் தனுஷ், நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்துள்ளார். அதாவது, ராதிகா - சரத்குமார் தம்பதியின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


    லீக்கான பாடல்

    இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜாபிலம்மா' என்ற பாடல் ரிலீஸாகுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த பாடல் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. மேலும், இந்த பாடலை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

    • நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


    'ஜப்பான்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு 'வாய்ஸ்கே இப்படீனா.. படம் ரிலீஸானா' என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    முன்னணி இயக்குனரான பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மண்வாசனை'. இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, வினு சக்ரவர்த்தி, காந்திமதி, விஜயன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.


    இந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'பொத்தி வச்ச மல்லிக மொட்டு' பாடல் 80 காலக்கட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'மண்வாசனை' திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்துள்ளது.


    இந்நிலையில், 'பொத்தி வச்ச மல்லிக மொட்டு' பாடலின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது என்று வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்றுடன்

    நாற்பது ஆண்டுகள்

    பாரதிராஜாவின்

    மண்வாசனை வெளிவந்து

    "ஆத்துக்குள்ள நேத்து

    ஒன்ன நெனச்சேன்

    வெக்கநெறம் போக

    மஞ்சக் குளிச்சேன்"என்ற வரியின்

    பொருள் புரியாமல்

    இன்னும் புகார் வருகிறது

    "என் வெட்கத்தின்

    சிவப்பு நிறம் பார்த்து

    அது ஆசையின்

    அழைப்பென்று கருதி

    என் முரட்டு மாமன்

    திருட்டுவேலை செய்துவிடக்கூடாது

    அதனால் மஞ்சள் பூசி

    என் வெட்கத்தை மறைக்கிறேன்"

    என்பது விளக்கம்

    இந்த நாற்பது ஆண்டுகளில்

    காதலின் விழுமியம் மாறியிருக்கிறது

    வெட்கப்பட ஆளுமில்லை

    மஞ்சளுக்கும் வேலையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான பி.வாசு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 60-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது 'சந்திரமுகி -2' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.


    இயக்குனர் பி.வாசு தனது பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது இயக்குனர் பி.வாசு தன்னுடைய உதவியாளர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கினார். இந்த கொண்டாட்டத்தில் ஜி. கே. எம். தமிழ் குமரன் மற்றும் ராகவா லாரன்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற அக்டோபர் 19-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய்தத், மிஷ்கின், அர்ஜுன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் அளித்த பேட்டியில், "லியோ படம் நன்றாக வந்துள்ளது. தம்பி விஜய்யும் படத்தை பார்த்துள்ளான். பார்த்து விட்டு நன்றாக உள்ளது என்று பாராட்டியுள்ளான். படம் மிகப்பெரிய வெற்றி பெறும்" என்று கூறியிருந்தார். விஜய்யை ஒருமையில் பேசியதற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


    விஜய் ரசிகர்கள் பகிர்ந்த போஸ்டர்

    சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ள விஜய் ரசிகர்கள், மிஷ்கின் மரணம் அடைந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தளபதியை இன்னும் அவன், இவன் என்று பேசுவதா? அப்படி சொல்லி கூப்பிடும் லெவலில் அவர் இல்லை. தளபதி அந்த நிலையையெல்லாம் தாண்டி பல வருஷம் ஆகிவிட்டது. பொது இடத்தில் பேசும்போது பார்த்து பேசுங்கள். தளபதி வருங்கால முதல்-அமைச்சர். அதனால் பொது இடத்தில் மரியதை கொடுத்து பேசுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

    • நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
    • இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நேற்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், ரசிகர்கள் இப்படத்திற்கு அளித்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக் பஸ்டர் என்ற வார்த்தை கேட்கும் போதும் அனைவரும் பாராட்டும் போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த காசிற்கு ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.


    தமிழ்நாடு மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை வருட உழைப்பிற்கு பலன் கிடைத்தது போல இருக்கு. நான் முன்பே கூறியிருந்தது போல என் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.



    • பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக உள்ளது.
    • இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதையடுத்து ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.


    இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 1 முதல் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதனை புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் 'இரண்டுல ஒன்னு பாத்தர்லாம்' என்று கூறியிருப்பார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.





    • ஜவான் திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    • ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது.

    மும்பை:

    ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார்.

    'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தொடர்ந்து 'ஜவான்' திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ.696.67 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், ஜவான் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, இசை அமைப்பாளர் அனிருத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது மேடையில் பாடிக் கொண்டிருந்த அனிருத், ஷாருக்கானை நடனமாட வரும்படி அழைத்தார். அவருடன் தீபிகா படுகோனேவும் வந்தார்.

    ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடி சலியா பாடலுக்கு அசத்தலாக நடனமாடியது. இதைக் கண்ட ரசிகர்கள் இந்த நடனத்தை வைரலாக்கி வருகிறார்கள்.


    • யூ டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்.
    • சகோதரர் ஏ.ஆர். ரகுமானையும் தொடர்பு படுத்தி பொய்யான வசந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார்.

    யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம்.

    நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

    ஒரு சகோதரி, யூ டியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர். ரகுமானையும் தொடர்பு படுத்தி பொய்யான வசந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார்.

    அது முற்றிலும் பொய்யே!

    அந்த யூ டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்.

    மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×