என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Thalapathy63 #Vijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விஜய் பேருந்து ஒன்றில் இருந்து இறங்குவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார்.

    தற்போது விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே கழுத்தில் காலர் பெல்ட் அணிந்து கொண்டு வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். 



    விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். #Thalapathy63 #Vijay #Nayanthara

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தில் மேலும் 4 பிரபலங்கள் இணைந்துள்ளனர். #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயனின் தங்கையாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர யோகி பாபு, சூரி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணைந்துள்ளனர். பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.


    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷாவும், படத்தொகுப்பாளராக ஆண்டனி எல்.ரூபனும், கலை இயக்குநராக வீர சமரும் ஒப்பந்தமாகி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. #SK16 #Sivakarthikeyan #Bharathiraja #Samuthirakani #NiravShah #AntonyLRuben

    `பார்ட்னர்' படத்தை தொடர்ந்து ஆதி அடுத்ததாக அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் தடகள விளையாட்டு வீரராக நடிக்கிறார். #Aadhi
    நடிகர் ஆதி தற்போது மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் `பார்ட்னர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.



    தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் மற்றும் குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா இணைந்து தயாரிக்கின்றனர். பிரவீன்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பையும், வைரபாலன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

    தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது. இது தடகள விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் படம் என்றார். #Aadhi

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #MrLocal #Sivakarthikeyan
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பாக்ட்ரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில், மிஸ்டர்.லோக்கல் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    சிம்பு படம் பற்றிய வதந்திக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #STR #Simbu #Yuvan
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு, 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

    இந்நிலையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பாடல் ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் யுவன் இசையில் 'மாநாடு' படத்துக்காக உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. 



    இதற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பாடல் உண்மை இல்லை. அது என்னுடைய டியூன் இல்லை' என்று பதிலளித்துள்ளார்.
    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Ayogya #Vishal
    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அயோக்யா’ படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இப்படம் வருகிற மே 10-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் மே-10ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.


    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. #Ayogya #Vishal #Raashikhanna
    நரேந்திர மோடி, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை தொடர்ந்து சஞ்சய் காந்தியின் வாழ்க்கை சினிமா படமாக உருவாக்குகிறார்கள். #SanjaiGandhi
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை படம் சமீபத்தில் வெளியானது. முன்னாள் முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை படங்களான எடுக்கப்பட்டு திரைக்கு வந்தன.

    நடிகர் சஞ்சய் தத், நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா ஆகியோரின் வாழ்க்கையும் சினிமா படமாக வெளியானது. இதுபோல் விளையாட்டு வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்த நிலையில் இப்போது பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோரின் வாழ்க்கையும் படமாகிறது.



    பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையையும் படமாக எடுத்து வருகிற 24-ந் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள். ஜெயலலிதா வாழ்க்கையும் படமாகி வருகிறது. இந்த நிலையில் சஞ்சய் காந்தியின் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி.

    இவர் 1980-ம் ஆண்டு விமான விபத்தில் உயிர் இழந்தார். இவரது வாழ்க்கை கதையை பிரபல இந்தி தயாரிப்பாளரான ஏக்தா கபூர் சினிமா படமாக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இந்த படத்துக்கு ‘தி பிரின்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் சஞ்சய்காந்தி வேடத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் கன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. #Sangatamizhan #VijaySethupathi
    `சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சிந்துபாத்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். #Sangatamizhan #VijaySethupathi #VijayChandar 
    எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜானகியின் உடல்நலம் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் முரளி கிருஷ்ணா பேட்டியளித்துள்ளார். #Janaki
    மூத்த பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு விபத்து ஒன்றில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். ஜானகியின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின.

    இதுதொடர்பாக ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘தனிப்பட்ட காரணங்களுக்காக அம்மாவும் நானும் மைசூருக்கு வந்துள்ளோம். இங்கு தங்கி இருந்த இடத்தில் வீட்டு காம்பவுண்டுக்குள் அம்மா வாக்கிங் சென்றார். வாக்கிங் முடித்த பின்னர் வீட்டுக்குள் நுழைய வாசல்படியில் ஏறும் போது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.



    ஆனால் அம்மா குளியல் அறையில் தவறி விழுந்து விட்டதாக செய்திகள் வெளியானது உண்மை இல்லை. உடனடியாக அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தோம்.

    ஆபரே‌ஷன் நடந்துள்ள நிலையில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துவந்து விட்டோம். இப்போது அம்மா குணமாகி வருகிறார். சீக்கிரமே எழுந்து நடக்கும் அளவுக்கு அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். வரும் நாள்களில் அம்மாவின் உடல்நிலையை பொறுத்து ஐதராபாத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு திரும்புவோம். அம்மாவின் உடல் நிலைகுறித்து ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டிய தில்லை’.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    2017ம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்ற ஷெர்லின் செத், தற்போது கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார். #SherlinSeth
    2017-ம் ஆண்டு ‘பெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை வென்றவர் ஷெர்லின் செத். மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்த இவர் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    பாலு சர்மா எழுதி இயக்கும் ‘உணர்வுகள் தொடர்கதை’ படத்தின் மூலம் ஷெர்லின் சேத் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்துவைக்கிறார். பாலு ‌ஷர்மா தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.



    இந்த படத்தில் ஷெர்லினுக்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் கவனம் பெற்ற ரிஷிகேஷ் நடிக்கிறார். நகர்ப்புறக் காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் பணிக்கு செல்லும் கணவன் மனைவிக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது.

    இந்த படத்தில் நடிப்பதற்காக ஷெர்லின் தமிழ் கற்றுக்கொண்டுள்ளார். இந்த படத்தில் விவேக் மெர்வின், தர்புகா சிவா, சக்தி ஸ்ரீ கோபாலன், இந்நோ கெங்கோ, சுனில், வருண் என மொத்தம் ஆறு இசையமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் எஸ்.கே.16 படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்திருக்கிறார்கள். #SK16 #Sivakarthikeyan
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 16-வது படமாகும். இப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்றில் இருந்து ஒவ்வொருத்தராக வெளியிட்டு வருகிறார்கள்.

    அதன்படி, இசையமைப்பாளர் இமான், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், காமெடி நடிகர்கள் சூரி, யோகிபாபு, ஆகியோர் இணைந்திருப்பதாக அறிவித்திருந்தார்கள். தற்போது நட்டி நட்ராஜும், ஆர்.கே.சுரேஷும் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.



    இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. #SK16 #Sivakarthikeyan
    என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினாலும், சமூகத்துல பெண்களுக்கு நடக்கிற பல வி‌ஷயங்களால் யாரையுமே நம்ப முடியவில்லை என்று நடிகை பூர்ணா கூறினார். #Poorna
    முனியாண்டி விலங்கியல் 3-ம் ஆண்டு, கந்தகோட்டம், ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன் படங்களில் நாயகியாக நடித்தவர் பூர்ணா. இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    ’நடக்கிறது, நடக்கப்போறது, நடந்தது... எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டது. சினிமாவில் நடிப்பேன், ஹீரோயின் ஆவேன்னு நான் நினைச்சதே இல்லை. யாருடைய ஆதரவும் இல்லாமல்தான், இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.

    என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்னு அரசாங்கம் சொன்னாலும், என்னைத் தனியா ஒரு இடத்துக்கு அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்ப எங்க அம்மா பயப்படுவாங்க. என்கூடவே அம்மா வருவாங்க, இல்லைன்னா, எட்டு வருடமா எங்ககிட்ட வேலை பார்க்கிற அக்கா வருவாங்க.



    ஏன்னா, இப்போ பெண்களுக்கு நடக்கிற வி‌ஷயங்களை பார்த்துட்டு அவங்களுக்கு ஒரு பயம். டான்ஸ் கிளாசுக்கு போனாக்கூட கண்டிப்பா யாராவது எனக்கு துணைக்கு வருவாங்க. சமூகத்துல பெண்களுக்கு நடக்கிற பல வி‌ஷயங்களால இப்படி யாரை நம்பலாம், நம்பக்கூடாதுன்னே தெரியல.

    பெண்கள் வி‌ஷயத்துல தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டா, தப்பு நடக்காது. அப்போ, தவறுகள் குறையும். பெண்களும் பயப்படாம வெளியே போகலாம். வெளிநாடுகளில் கடுமையான தண்டைகள் கொடுக்கிறாங்க. நம்ம நாட்டுல அப்படியில்லை’. இவ்வாறு அவர் கூறினார். #Poorna

    ×