என் மலர்
சினிமா செய்திகள்
2017ம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்ற ஷெர்லின் செத், தற்போது கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார். #SherlinSeth
2017-ம் ஆண்டு ‘பெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை வென்றவர் ஷெர்லின் செத். மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்த இவர் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
பாலு சர்மா எழுதி இயக்கும் ‘உணர்வுகள் தொடர்கதை’ படத்தின் மூலம் ஷெர்லின் சேத் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்துவைக்கிறார். பாலு ஷர்மா தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இந்த படத்தில் ஷெர்லினுக்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் கவனம் பெற்ற ரிஷிகேஷ் நடிக்கிறார். நகர்ப்புறக் காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் பணிக்கு செல்லும் கணவன் மனைவிக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஷெர்லின் தமிழ் கற்றுக்கொண்டுள்ளார். இந்த படத்தில் விவேக் மெர்வின், தர்புகா சிவா, சக்தி ஸ்ரீ கோபாலன், இந்நோ கெங்கோ, சுனில், வருண் என மொத்தம் ஆறு இசையமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் எஸ்.கே.16 படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்திருக்கிறார்கள். #SK16 #Sivakarthikeyan
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 16-வது படமாகும். இப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்றில் இருந்து ஒவ்வொருத்தராக வெளியிட்டு வருகிறார்கள்.
அதன்படி, இசையமைப்பாளர் இமான், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், காமெடி நடிகர்கள் சூரி, யோகிபாபு, ஆகியோர் இணைந்திருப்பதாக அறிவித்திருந்தார்கள். தற்போது நட்டி நட்ராஜும், ஆர்.கே.சுரேஷும் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
.@natty_nataraj and @studio9_suresh join the cast of #SK16BySunPictures@Siva_Kartikeyan@Pandiraj_dir@Immancomposer#NatarajanJoinsSK16#RKSureshJoinsSK16pic.twitter.com/IgiKqGEgGd
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. #SK16 #Sivakarthikeyan
என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினாலும், சமூகத்துல பெண்களுக்கு நடக்கிற பல விஷயங்களால் யாரையுமே நம்ப முடியவில்லை என்று நடிகை பூர்ணா கூறினார். #Poorna
முனியாண்டி விலங்கியல் 3-ம் ஆண்டு, கந்தகோட்டம், ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன் படங்களில் நாயகியாக நடித்தவர் பூர்ணா. இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
’நடக்கிறது, நடக்கப்போறது, நடந்தது... எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டது. சினிமாவில் நடிப்பேன், ஹீரோயின் ஆவேன்னு நான் நினைச்சதே இல்லை. யாருடைய ஆதரவும் இல்லாமல்தான், இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.
என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்னு அரசாங்கம் சொன்னாலும், என்னைத் தனியா ஒரு இடத்துக்கு அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்ப எங்க அம்மா பயப்படுவாங்க. என்கூடவே அம்மா வருவாங்க, இல்லைன்னா, எட்டு வருடமா எங்ககிட்ட வேலை பார்க்கிற அக்கா வருவாங்க.

ஏன்னா, இப்போ பெண்களுக்கு நடக்கிற விஷயங்களை பார்த்துட்டு அவங்களுக்கு ஒரு பயம். டான்ஸ் கிளாசுக்கு போனாக்கூட கண்டிப்பா யாராவது எனக்கு துணைக்கு வருவாங்க. சமூகத்துல பெண்களுக்கு நடக்கிற பல விஷயங்களால இப்படி யாரை நம்பலாம், நம்பக்கூடாதுன்னே தெரியல.
பெண்கள் விஷயத்துல தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டா, தப்பு நடக்காது. அப்போ, தவறுகள் குறையும். பெண்களும் பயப்படாம வெளியே போகலாம். வெளிநாடுகளில் கடுமையான தண்டைகள் கொடுக்கிறாங்க. நம்ம நாட்டுல அப்படியில்லை’. இவ்வாறு அவர் கூறினார். #Poorna
பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்க தானா நாயுடு நாயகியாக நடித்துள்ள "கைலா" படத்தின் முன்னோட்டம். #Kaila
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு "கைலா" என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். பாஸ்கர் சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர் மனோகர், ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பரணி செல்வம், இசை - ஸ்ரவன், படத்தொகுப்பு - அசோக் சார்லஸ், பாடல்கள் - வடிவரசு, கலை - மோகன மகேந்திரன், நடனம் - எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு நிர்வாகம் - ஆர்.சுப்புராஜ், கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - பாஸ்கர் சீனுவாசன்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..
உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.
பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம் என்றார். #Kaila
கோடை விடுமுறையின் போது பள்ளிகள் விடுமுறை என்பதால் இந்த நேரத்தில் தங்களது படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். #Ayogya #Kee #Neeya2
கோடை விடுமுறை என்றாலே தமிழ் சினிமாவுக்கு கொண்டாட்டம் தான். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், எந்த படம் ரிலீசானாலும் முதலுக்கு மோசம் இருக்காது என்பதால் மே மாதத்தில் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய போட்டா போட்டி நடக்கும். வரும் வாரம் வெளியாக இருந்த படம் நீயா 2. இந்த படத்தில் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்துள்ளார். வரும் 10-ந் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இதன் விளம்பர வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் மே 24-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் வேண்டுகோள் வைத்ததால் அந்த வேண்டுகோளை ஏற்று மே 24-ந் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மே10-ந் தேதியை குறிவைத்து விஷாலின் அயோக்யா, ஜீவாவின் கீ, மற்றும் அதர்வாவின் 100 படங்கள் வெளியாக உள்ளன. மேலும், பேரழகி ஐ.எஸ்.ஓ., காதல் முன்னேற்றக் கழகம், சீனி ஓவியாவ விட்டா யாரு, உண்மையின் வெளிச்சம், வேதமானவள் போன்ற படங்களும் வெளிவர உள்ளன.

கோடை விடுமுறையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர இருக்கும் நிலையில், தியேட்டர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அறிவிக்கப்பட்ட தேதியை சில தினங்களுக்கு முன் மாற்றுவதும் நடந்து வருகிறது. #Ayogya #Kee #Neeya2
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தில் பிரபல காமெடியன்கள் 2 பேர் இணைந்துள்ளனர். #SK16 #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் 5 படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம். சின்னத்திரையில் வலம் வந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ்.
மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.
.@yogibabu_offl and @sooriofficial join the cast of #SK16BySunPictures@Siva_Kartikeyan@Pandiraj_dir@Immancomposer
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
#YogiBabuJoinsSK16#SooriJoinsSK16pic.twitter.com/4tgC8u702c
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், முன்னணி காமெடியன்கள் யோகி பாபு மற்றும் சூரி படக்குழுவில் இணைந்துள்ளனர். இதுதவிர பாரதிராஜா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார். #SK16 #Sivakarthikeyan #YogiBabu #Soori
தமிழர்களுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, தமிழர்கள் தலை நிமிர்வதால் கன்னடர்கள் பீதி அடைவதாக கூறினார். #Kasthuri #PrakashRaj
சென்னை:
ராஜ்குமார் இயக்கத்தில் ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:-
‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
ஆனால் இங்கே பேசிய கஸ்தூரி ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி.பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள்.
நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. அதன் பிறகுதான் டப்பிங் படத்திற்கு வசனம் எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
‘அகோரி ’படத்திற்கு இந்த டைட்டில் பெரிய பிளஸ். பேய் வந்து பழிவாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது. அகோரி என்பதை நான் நெகட்டிவ் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் அதனை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன்’
இவ்வாறு அவர் கூறினார்.

பிரகாஷ்ராஜ் டெல்லியில் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அவர் அங்கு சொன்ன கருத்தை இங்கு வந்து சொல்லவேண்டும். இங்கு வளர்ந்தவர் அவர். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர். இங்கு எங்களது வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.
எனவே அதேபோல் இங்கும் வந்து எங்கள் மாணவர்களின் கல்வியும் இளைஞர்களின் வேலை வாய்ப்பும் பறிபோவதை பற்றி பேசவேண்டும். இல்லை என்றால் தமிழகம் அவரை புறக்கணிக்கும்.’
இவ்வாறு செல்வகுமார் பேசினார்.
நடிகை கஸ்தூரி பேசியதாவது:-
‘பிடி.செல்வகுமார் கூறியபடி தமிழகத்தில் வளர்ந்தவர்கள் தமிழகத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் டெல்லியில் மட்டும்தான் வேலைக்கு செல்கிறார்கள், பதவியை பறித்துக்கொள்கிறார்கள் என்று இல்லை. நாடு முழுக்கவே தமிழர்கள் பணியாற்றுகிறார்கள். காரணம் தமிழர்கள் அறிவாளிகள். அவர்கள் திறமை விஷயத்தில் வேறு மாநிலத்தவர்கள் அடித்துக் கொள்ள முடியாது.
மே23-ந்தேதிக்கு பிறகு தமிழகம் தான் கிங் மேக்கராக திகழப்போகிறது. அதைத் தெரிந்துதான் கன்னடக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக பேச தொடங்கியுள்ளனர். நாம் தலை நிமிர நிமிர மற்றவர்கள் பீதி அடையத் தான் செய்வார்கள்.
தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதையும் இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள். ஜெயிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்திலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். இந்த அகோரியும் அடுத்த காஞ்சனாவாக இருக்கும் என்று நம்புகிறேன். கிராபிக்ஸ் காட்சிகளை பார்க்கும்போது பாகுபலிக்கு நிகரான காட்சிகளை உணர்ந்தேன்.’
இவ்வாறு கஸ்தூரி பேசினார். #Kasthuri #PrakashRaj

தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் பேசியதாவது:-

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் `கொலைகாரன்' படத்தை ரம்ஜான் விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. #Kolaigaran #VijayAntony
‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘கொலைகாரன்’.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ரம்ஜான் விடுமுறை நாளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை பாப்டா தனஞ்செயன் வெளியிடுகிறார்.
Tamil Cinema brought out some wonderful suspense thrillers. We at #Kolaigaran team wish to pay our tribute to them through a series of posters. Poster - 1 with Dir.Bharathirajaa's #SigappuRojakkal@ikamalhaasan .Your check list to watch them too @vijayantony@andrewxvasanth 👍 pic.twitter.com/eOxDZP8pRz
— BOFTA Dr. Dhananjayan G (@Dhananjayang) May 6, 2019
விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். #Kolaigaran #VijayAntony #Arjun
பேய் பற்றி படம் எடுத்தால், மக்கள் குடும்பத்துடன் சென்று பார்த ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை பேய் என்ற ஒன்று இல்லை என்று இயக்குநர் பாக்யராஜ் பேசினார். #Aghori #Bhagyaraj
ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா மற்றும் மோஷன் பிலிம் பிக்சர் சார்பில் சுரேஷ் கே.மேனன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அகோரி’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் நடிகர் மைம் கோபி, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.ஜி.முத்தையா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான ஆர்.பி.பாலா, இணை தயாரிப்பாளர் சுரேஷ் கே.மேனன், இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார், ஒளிப்பதிவாளர் வசந்த், நடிகர்கள் சித்து, வெற்றி, கார்த்திக், ஷரத், உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது,
‘அகோரி ’படத்திற்கு இந்த டைட்டில் பெரிய பிளஸ். சில விஷயங்களைப் பற்றி பலர் எவ்வளவு பேசினாலும் நாம் அதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். பேயைப் பற்றி பேசினால் கேட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் எனக்கு ஒன்று தோன்றும். பேய் இருப்பது உண்மை என்றால், இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்பது இருக்காது. ஒருவரைக் கொலை செய்து விட்டால், அவர் பேயாக வந்து பழிக்குப் பழி வாங்கி கொன்றுவிடுவார். ஆனால் தற்போது கொலையாளியைப் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பேய் என்பது இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் பேய் வந்து பழிவாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது.

பேய் பற்றி அப்படி ஒரு படம் எடுத்தால், மக்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய் போல தான் அகோரியும் இருக்கும் என்று நினைத்தேன். அதனுடைய ஒலி கூட எதிர்மறையாக இருந்தது. அகோரி என்பதை நான் நெகட்டிவ் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் அதனை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன்.
அகோரியை பற்றி எத்தனை பேர், எத்தனை வகையில் கதை சொன்னாலும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருப்போம். நாம் சில விஷயங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றிச் சொல்லலாம். மக்கள் அதை ரசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ‘அகோரி’என்ற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் மக்கள் நம்பும் வகையில் லாஜிக்குடன் சொல்ல வேண்டும். அப்படி சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றியைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார். #Aghori #Bhagyaraj
என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் பாஜகவில் இருந்து விலகவில்லை என்றும் காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். #GayathriRaghuram #BJP
சென்னை:
பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். இவர் 2002-ம் ஆண்டு வெளியான ‘சார்லி சாப்ளின்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அவர் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின்போது அவரது செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. காயத்ரி ரகுராம் பா.ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
காயத்ரி ரகுராம் மீது சர்ச்சைகள் வரும்போது எல்லாம் கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர் கட்சியில் இல்லை என்று விமர்சித்தார். பதிலுக்கு காயத்ரியும் தமிழிசையை விமர்சித்தார். இதுவும் சர்ச்சையானது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தான் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காயத்ரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்து விட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது.
நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். முடிவில் நாம் நகைச்சுவை பொருளாகிவிடுகிறோம். இது எனது தனிப்பட்ட கருத்து.
சினிமாவைவிட, அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்க பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன். அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே.
நான் இப்போதைக்கு வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள சிறிது இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி.’

இந்த பதிவை தொடர்ந்து காயத்ரி பா.ஜனதாவில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இவற்றை மறுத்து இருக்கிறார்.
இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில் ‘நான் அரசியலில் சிறிது இடைவெளி எடுக்க இருப்பதாகத் தான் தெரிவித்துள்ளேன். நான் குறிப்பிட்டது பா.ஜனதா கட்சியை அல்ல’ என்று தெரிவித்துள்ளார். #GayathriRaghuram #BJP

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கும் சிம்பு அடுத்ததாக, பிரபல இயக்குநர் ஒருவருடன் 15 வருடங்களுக்கு பிறகு இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR #Hari
`வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
ஹன்சிகா நடிக்கும் மஹா படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் மப்ஃடி தமிழ் ரீமேக்கில் கேங்ஸ்டராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார். கவுதம் இதில் போலீசாக நடிக்கிறார்.
இந்த நிலையில், சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது பற்றி இயக்குநர் ஹரி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஹரி ஏற்கனவே சிம்புவை வைத்து கோவில் என்ற படத்தை இயக்கினார். 15 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், ஹரி - சிம்பு இணையும் புதிய படத்தை தயாரிப்பது குறித்து ஏ.எம்.ரத்னம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சிம்பு இந்தியா திரும்பியதும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரி முன்னதாக சூர்யாவை வைத்து புதிய படமொன்றை இயக்க முடிவு செய்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் சூர்யா பிசியானதாலும், அந்த படத்தை தயாரிக்க இருந்த சன் பிக்சர்ஸ் பின்வாங்கியதாலும் சிம்புவை வைத்து படத்தை இயக்க ஹரி முடிவு செய்துள்ளார். #STR #Hari
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வசூலில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. #AvengersEndgame #Avengers
உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்கள் மற்றும் தனோஸ் என்ற சக்திவாய்ந்த வில்லன் ஒன்றாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படம் திரையிட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் அதிக வசூல் குவித்த படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இரண்டே வாரத்தில் முறியடித்துள்ளது. மேலும் அவதார் படத்தின் வசூலையும் இந்த படம் முந்தும் என்று சினிமா வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடி வசூலித்துள்ள இந்த படம், ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AvengersEndgame #Avengers