என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வசூலில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. #AvengersEndgame #Avengers
    உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்கள் மற்றும் தனோஸ் என்ற சக்திவாய்ந்த வில்லன் ஒன்றாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    படம் திரையிட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.



    இதன் மூலம் அதிக வசூல் குவித்த படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இரண்டே வாரத்தில் முறியடித்துள்ளது. மேலும் அவதார் படத்தின் வசூலையும் இந்த படம் முந்தும் என்று சினிமா வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

    இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடி வசூலித்துள்ள இந்த படம், ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AvengersEndgame #Avengers

    மும்பையில் இளம் பெண் கொடுத்த பாலியல் புகாரில் பிரபல டி.வி. நடிகர் கரண் ஓபராய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #KaranOberoi
    பாலிவுட்டில் கார், பைக் மற்றும் பேஷன் ஷோக்களில் முன்னணி மாடலாக இருப்பவர் கரண் ஓபராய். இவர் டி.வி. தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் மீது இளம் பெண் ஒருவர் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், தன்னைக் கற்பழித்ததோடு நில்லாமல் அதை வீடியோவும் எடுத்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் அப்படிப் பணம் தராவிட்டால் அந்த வீடியோவை வலைதளங்களங்களில் வெளியிடப்போவதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.



    இந்த புகாரின் அடிப்படையில் கரண் ஓபராயை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து நடிகர் விஷால், தலைவர் நாசர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். #NadigarSangam #Vishal
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி போட்டியிட்டு வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும் விஷால் பொதுசெயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபரில் தேர்தல் நடத்தி இருக்கவேண்டும். ஆனால் சங்கத்தின் கட்டிட வேலை நடப்பதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன், ஜூலையில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    இந்த தேர்தலில் விஷால் மீண்டும் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சங்கத்தின் செயற்குழுவில் விஷால் கலந்துகொள்ளவில்லை. செயற்குழு முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் நாசர் மீண்டும் போட்டியிடுவது பற்றி விரைவில் அறிவிப்பதாக கூறினார்.



    இந்நிலையில் நேற்று இரவு விஷால் தலைமையிலான அணியினர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர். விஷால், நாசர், பூச்சி முருகன், ரமணா, வழக்கறிஞர் கிருஷ்ணா ஆகியோர் இதில் பங்குபெற்றனர்.

    மீதம் இருக்கும் கட்டிட பணிகளை முடிப்பது, அதற்காக தேவைப்படும் நிதியை திரட்டுவது, தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது ஆகியவை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலோசனையில் நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் மறுபடியும் போட்டியிடுவதாகவும், பூச்சி முருகன் துணைத் தலைவராகவும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘எஸ்கே 16’ படத்தில் அனு இம்மானுவேலை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருக்கிறார். #SK16 #Sivakarthikeyan
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 16-வது படமாகும். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இமான் இசையமைப்பாளரும், துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இம்மானுவேல் கதாநாயகியாகவும் படத்தில் இணைந்திருப்பதாக இன்று அறிவிப்பு வெளியானது. தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார். 



    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் இணைந்திருக்கிறார். #SK16 #Sivakarthikeyan
    திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகை எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தத்தை உற்சாகமாக முடித்துள்ளார். #AmyJackson
    மதராசபட்டிணம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த இவர் தொடர்ந்து தாண்டவம், தெறி, 2.0 படங்களில் நடித்தார்.

    எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜார்ஜை காதலித்து வந்தார். ஜார்ஜ் தன்னிடம் காதலை தெரிவித்ததாகவும் தான் சம்மதித்து விட்டதாகவும் புத்தாண்டு அன்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

    இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். எமியும் அவரது காதலரும் அடுத்த ஆண்டு கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.



    இருவருக்கும் ஏற்கனவே திட்டமிட்டபடி நிச்சயதார்த்தம் நேற்று லண்டனில் நடந்தது. இருவரும் நிச்சயதார்த்த பார்ட்டியை பிரமாண்டமாக நடத்தி நண்பர்கள், உறவினர்களை அசத்திவிட்டனர். பார்ட்டியில் எமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தனது வருங்கால கணவர் ஜார்ஜுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்.

    அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரல் ஆகிறது. எமிக்கு அக்டோபர் மாதம் பிரசவம் நடக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். ‘இது திட்டமிடப்படாத கர்ப்பம். இருந்தாலும் பெற்றோர் ஆக நானும், ஜார்ஜும் தயாராகி விட்டோம்’ என்று எமி முன்பே கூறிவிட்டார்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் விஷாலுடன் நடித்த நடிகை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். #SK16 #Sivakarthikeyan
    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் வருகிற மே 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். 

    இப்படங்களை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் இப்படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 



    அனு இம்மானுவேல் இதற்கு முன் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷாலுக்கு ஜோடியாக ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்துள்ளார். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel
    இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாகி பிரபலமான ரித்திகா சிங்கின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். #RitikaSingh
    குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார்.

    இறுதிச் சுற்று படத்தை அடுத்து தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். அரவிந்த்சாமியுடன் நடித்த வணங்காமுடி ரிலீசாகாமல் பைனான்ஸ் பிரச்சினையால் தவிக்கிறது. அதன் பின்னர் ரித்திகாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. ரித்திகாவுக்கு தமிழ் மட்டும் அல்ல தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லை.



    இந்நிலையில் அவர் ஒரு போட்டோஷூட்டுக்கு உள்ளாடை அணியாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    ரித்திகாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்களுக்கு இது போன்று கவர்ச்சி செட்டாகாது, நீங்கள் நன்றாக நடிக்கத் தெரிந்தவர், இப்படி செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ புகைப்படங்கள் சூப்பர், சூடாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். #SK16 #Sivakarthikeyan
    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் வருகிற மே 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். 

    இப்படங்களை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


    சிவகார்த்திகேயனின் 16-வது படமாக உருவாகும் இதில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். #SK16 #Sivakarthikeyan #Pandiraj
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், அவர் கேட்டதால் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார். #HarishKalyan
    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியாலும், அதன் பின் நடித்த படங்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ஹரீஷ் கல்யாண்.

    சமீபத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெர்சி’ தெலுங்கு படத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கிறார். அந்த வேடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: -

    ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்‘ படங்களை பார்த்துவிட்டு அனிருத்தின் நண்பர் சித்தார்த் மூலமாக ‘ஜெர்சி’ படத்துக்காக என்னை அணுகினார்கள். என் ரெண்டு படங்களுடைய தெலுங்கு டப்பிங் பதிப்பு ரிலீசாக இருக்கிற நேரத்துல இந்தப் படத்துல சின்ன ரோல்ல பண்றது சரியா இருக்குமான்னு யோசனை இருந்தது. அப்புறம், நடிகர் நானி எனக்குப் போன் பண்ணி ‘உங்க படங்களை பார்த்திருக்கேன் பிரதர். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.



    நீங்க இந்த கேரக்டர் பண்ணா நல்லா இருக்கும். இந்தப் படத்தை ஆரம்பிக்கிறதும் முடிக்கிறதும் உங்க கேரக்டர்தான்’னு சொன்னார். அப்புறம், டைரக்டர் கிட்ட கதை கேட்டுட்டு நானிக்குப் போன் பண்ணி, ‘நீங்க கொடுத்த நம்பிக்கையில் தான் பண்றேன் பிரதர்’னு சொன்னேன். 10 நிமிடம் படத்துல வந்தாலும் என் கேரக்டர் ரொம்ப எமோ‌ஷனலானது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா, தான் காதலில் விழுந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #AishwaryaDutta
    தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 



    இந்நிலையில், தான் காதலில் விழுந்திருப்பதாக ஐஸ்வர்யா தத்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இவருடைய பதிவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி, யார் அந்த நபர் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் 100 படம் வரும் வாரம் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில் முதன்முறையாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்திருப்பதாக ஹன்சிகா பற்றி கூறினார். #Atharvaa
    அதர்வாவுக்கு நாளை பிறந்தநாள். அவர் முதன்முறையாக போலீசாக நடித்து இருக்கும் 100 படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி:-

    நீங்களும் காக்கி உடை அணிந்து விட்டீர்களா?

    ஆமாம். எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கதையில் நடிக்கும் ஆசை இருக்கும். ஆனால் எனக்கு அதற்கான சரியான கதை அமையவில்லை. சாம் ஆண்டன் 100 கதையை சொன்னபோதே விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. 100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், அதை அட்டென்ட் செய்யும் காவலரின் மனநிலை எப்படி இருக்கும்? அவர் உண்மையிலேயே சம்பந்தப்பட்டவருக்கு உதவி செய்வாரா? அல்லது அவருக்கு என்னென்ன சிக்கல்கள் என்பதை பற்றி சொல்லும் படம் இது. எனக்கு உண்மையிலேயே இது வித்தியாசமான கேரக்டர். 100 படம் என்னால் மறக்க முடியாத படமாக இருக்கும்.

    போலீசாக நடிக்க தயாரானது எப்படி?

    போலீஸ் வேடத்தில் நடிக்கும்போது மற்றவர்களுக்கு என் மீது நம்பிக்கை வருவதற்கு முன்பு எனக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்காக வொர்க் அவுட் செய்து பிட் ஆனேன்.



    உண்மை சம்பவங்கள் அடங்கிய கதையா?

    சில உண்மை சம்பவங்கள் கதையில் இருக்கும். ஆனால் அவற்றை வைத்து கமர்சியலான படமாக கொடுத்து இருக்கிறோம்.

    ஹன்சிகாவுடன் நடித்த அனுபவம்?

    அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிவார். போலீசாக முயற்சி செய்துகொண்டு இருக்கும் நான் அவரை கிண்டல் செய்வேன். கடைசியில் நானே போலீஸ் துறையில் அதுபோன்ற ஒரு வேலையில் சேர்வேன். அது சுவாரசியமாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதன்முறையாக சுத்தமாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.



    பஞ்ச் வசனங்கள் இருக்குமா?

    என்னால் விஜய் சார், சூர்யா சார் மாதிரி இப்போது பஞ்ச் வசனம் பேச முடியாது. அவர்கள் உயரம் வேறு.

    வெற்றி, தோல்விகளை எப்படி பார்க்கிறீர்கள்?

    நான் தேர்வு செய்யும் கதைகள் எனக்கு திருப்தி அளித்தபிறகு தான் தேர்வு செய்கிறேன். ஆனால் வெற்றி, தோல்வி என்பது நம் கையில் கிடையாது. எல்லா படங்களையுமே உயிரை கொடுத்து தான் நடிக்கிறேன். ஒரே மாதிரியான உழைப்பை தான் தருகிறேன். சினிமா என்பது டீம் வொர்க். எனக்கு இப்போது கிடைத்துள்ள அடையாளம் என்பது நான் நடித்த படங்களால் தான் கிடைத்து இருக்கிறது. #100TheMovie #Atharvaa #Hansika

    விஜயன்.சி தயாரித்து இயக்க, விவேக் - ஷில்பா மஞ்சுநாத், சச்சு இணைந்து நடித்துள்ள `பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் முன்னோட்டம். #PerazhagiISO #Vivek #ShilpaManjunath
    கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ள படம் `பேரழகி ஐ.எஸ்.ஓ'.

    `நீ என்ன மாயம் செய்தாய்', `மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், `காளி' படத்தில் அறிமுகமாகி, `இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - இ.ஜே.நாசாத், இசை - சார்லஸ் தனா, படத்தொகுப்பு - இளவரசன், சண்டைக்காட்சிகள் - கிக்கேஸ் காளி, நிர்வாகத் தயாரிப்பு - நாகராஜன், இணை தயாரிப்பு - ஏ.எஸ்.அன்பு, வி.ரவிக்குமார், ஐ.அந்தோணி, தயாரிப்பு, இயக்கம் - விஜயன்.சி



    படம் குறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது,

    கதைப்படி எனது பாட்டி சச்சு, என்னைப் போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாக செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கதாபாத்திரம் வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும் என்றார்.

    படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #PerazhagiISO #Vivek #ShilpaManjunath

    பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் டிரைலர்:

    ×