என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் 100 படம் வரும் வாரம் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில் முதன்முறையாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்திருப்பதாக ஹன்சிகா பற்றி கூறினார். #Atharvaa
    அதர்வாவுக்கு நாளை பிறந்தநாள். அவர் முதன்முறையாக போலீசாக நடித்து இருக்கும் 100 படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி:-

    நீங்களும் காக்கி உடை அணிந்து விட்டீர்களா?

    ஆமாம். எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கதையில் நடிக்கும் ஆசை இருக்கும். ஆனால் எனக்கு அதற்கான சரியான கதை அமையவில்லை. சாம் ஆண்டன் 100 கதையை சொன்னபோதே விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. 100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், அதை அட்டென்ட் செய்யும் காவலரின் மனநிலை எப்படி இருக்கும்? அவர் உண்மையிலேயே சம்பந்தப்பட்டவருக்கு உதவி செய்வாரா? அல்லது அவருக்கு என்னென்ன சிக்கல்கள் என்பதை பற்றி சொல்லும் படம் இது. எனக்கு உண்மையிலேயே இது வித்தியாசமான கேரக்டர். 100 படம் என்னால் மறக்க முடியாத படமாக இருக்கும்.

    போலீசாக நடிக்க தயாரானது எப்படி?

    போலீஸ் வேடத்தில் நடிக்கும்போது மற்றவர்களுக்கு என் மீது நம்பிக்கை வருவதற்கு முன்பு எனக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்காக வொர்க் அவுட் செய்து பிட் ஆனேன்.



    உண்மை சம்பவங்கள் அடங்கிய கதையா?

    சில உண்மை சம்பவங்கள் கதையில் இருக்கும். ஆனால் அவற்றை வைத்து கமர்சியலான படமாக கொடுத்து இருக்கிறோம்.

    ஹன்சிகாவுடன் நடித்த அனுபவம்?

    அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிவார். போலீசாக முயற்சி செய்துகொண்டு இருக்கும் நான் அவரை கிண்டல் செய்வேன். கடைசியில் நானே போலீஸ் துறையில் அதுபோன்ற ஒரு வேலையில் சேர்வேன். அது சுவாரசியமாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதன்முறையாக சுத்தமாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.



    பஞ்ச் வசனங்கள் இருக்குமா?

    என்னால் விஜய் சார், சூர்யா சார் மாதிரி இப்போது பஞ்ச் வசனம் பேச முடியாது. அவர்கள் உயரம் வேறு.

    வெற்றி, தோல்விகளை எப்படி பார்க்கிறீர்கள்?

    நான் தேர்வு செய்யும் கதைகள் எனக்கு திருப்தி அளித்தபிறகு தான் தேர்வு செய்கிறேன். ஆனால் வெற்றி, தோல்வி என்பது நம் கையில் கிடையாது. எல்லா படங்களையுமே உயிரை கொடுத்து தான் நடிக்கிறேன். ஒரே மாதிரியான உழைப்பை தான் தருகிறேன். சினிமா என்பது டீம் வொர்க். எனக்கு இப்போது கிடைத்துள்ள அடையாளம் என்பது நான் நடித்த படங்களால் தான் கிடைத்து இருக்கிறது. #100TheMovie #Atharvaa #Hansika

    விஜயன்.சி தயாரித்து இயக்க, விவேக் - ஷில்பா மஞ்சுநாத், சச்சு இணைந்து நடித்துள்ள `பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் முன்னோட்டம். #PerazhagiISO #Vivek #ShilpaManjunath
    கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ள படம் `பேரழகி ஐ.எஸ்.ஓ'.

    `நீ என்ன மாயம் செய்தாய்', `மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், `காளி' படத்தில் அறிமுகமாகி, `இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - இ.ஜே.நாசாத், இசை - சார்லஸ் தனா, படத்தொகுப்பு - இளவரசன், சண்டைக்காட்சிகள் - கிக்கேஸ் காளி, நிர்வாகத் தயாரிப்பு - நாகராஜன், இணை தயாரிப்பு - ஏ.எஸ்.அன்பு, வி.ரவிக்குமார், ஐ.அந்தோணி, தயாரிப்பு, இயக்கம் - விஜயன்.சி



    படம் குறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது,

    கதைப்படி எனது பாட்டி சச்சு, என்னைப் போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாக செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கதாபாத்திரம் வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும் என்றார்.

    படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #PerazhagiISO #Vivek #ShilpaManjunath

    பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் டிரைலர்:

    சண்டைக்காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக படத்தில் நடிக்காமல் ஓய்வில் இருந்த நடிகர் விஷ்ணு விஷால் பிரபு சாலமன் இயக்கும் `காடன்' படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார். #Kaadan #VishnuVishal
    `கும்கி-2' படத்தை இயக்கி வரும் பிரபு சாலமன், அதேநரேத்தில் `ஹாதி மெரே சாதி' என்ற இந்தி படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பையும் இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூணாரில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஷ்ணு விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.

    காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வு இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மீண்டும் பிரபு சாலமன் படத்தில் இணைந்திருக்கிறேன். விட்ட இடத்தில் இருந்து படப்பிடிப்பை துவங்கியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு `காடன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு பதிப்புக்கு `ஆரண்யா' என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தி பதிப்பில் புல்கித் சாம்ராட் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். #Kaadan #VishnuVishal #RanaDaggubati

    எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்திற்கு தணிக்கை மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவால் தடை நீங்கி தணிக்கை செய்யப்பட்டது. #MarinaPuratchi
    ‘ஜல்லிக்கட்டு’ போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை குழு படத்துக்கு அனுமதி கொடுக்காமல் மறுசீரமைப்பு குழுவுக்கு அனுப்பியது.

    படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான மறு சீரமைப்பு குழு எந்த காரணமும் சொல்லாமல் மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதித்தனர். மறு சீரமைப்பு குழு மறுப்பு தெரிவித்தால் டெல்லி கோர்ட்டுக்கு சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை.

    ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2வது மறு சீரமைப்பு குழுவுக்கு படம் அனுப்பப்பட்டது. இதிலும் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் படக்குழு கோர்ட்டை அணுகியது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டது தற்போது படத்துக்கு சென்சாரில் `யு' சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறியதாவது:-

    பல போராட்டங்களுக்கு பிறகு சென்சார் சான்றிதழ் வாங்கி இருக்கிறோம். இந்திய திரை வரலாற்றிலேயே முதன் முறையாக 3 முறை மறுக்கப்பட்டு பின்னர் கோர்ட்டு உத்தரவு மூலம் சென்சார் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது.



    தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளையும் பேசும் படமாக மெரினா புரட்சி இருக்கும். இதில் என் கற்பனை எதுவுமே இல்லை.

    இங்கு சென்சார் தரப்படாவிட்டாலும் உலகில் 9 நாடுகளில் தமிழர்கள் திரையிட்டு பார்த்தார்கள். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஏமன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் திரையிட்டு இருக்கிறோம். இன்னும் பல நாடுகளில் திரையிடப்பட இருக்கிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது’.

    இவ்வாறு அவர் கூறினார். #MarinaPuratchi #MSRaj

    ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படக்குழுவின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #SuttuPidikkaUtharavu
    `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

    செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் வருகிறார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.


    கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். #SuttuPidikkaUtharavu #Suseenthiran #Mysskin #Vikranth #Athulya

    விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு `டகால்டி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Dagalti
    காமெடி நடிகராக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான `தில்லுக்கு துட்டு 2' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்த நிலையில், சந்தானம் தற்போது புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் `ஏ1' (அக்யூஸ்டு நம்பர் 1) என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

    இந்த நிலையில், ஷங்கரின் முன்னாள் உதவியாளரான விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு `டகால்டி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    இதுதவிர ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் சந்தானம் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. #Dagalti #Santhanam #YogiBabu

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #PonniyinSelvan #Maniratnam
    இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

    கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா, அனுஷ்காவுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    மணிரத்னம் தற்போது படத்திற்கான செட் அமைக்கும் இடங்களை தேர்வு செய்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் நடிக்க இருக்கின்றனர். இவர்களிடம் குதிரை ஏற்றம், வாள் பயிற்சிகளை மேற்கொள்ள மணிரத்னம் அறிவுறுத்தியிருக்கிறார். #PonniyinSelvan #Maniratnam #AmalaPaul

    சென்னை நட்சத்திர ஓட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதாக டார்லிங் 2 பட இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #SathishChandrasekaran
    சென்னை அண்ணா சாலையில் பார் வசதியுடன் பிரபல நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலுக்கு ‘டார்லிங் 2’ படத்தை இயக்கிய சினிமா இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்தார். 

    அப்போது அவர், மதுபோதையில் அந்த நட்சத்திர ஓட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் மீது அந்த பெண் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



    இந்த ஓட்டலில் மதுபோதையில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த ஓட்டலில் இரவு 2 மணிக்கு மேல் பார் இயங்கக் கூடாது என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். #SathishChandrasekaran

    பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அஜய் தேவ்கனுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரது ரசிகர் போஸ்டர் மூலம் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #AjayDevgan #FanRequests
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் நானக்ராம்(40).  ஜெய்ப்பூரின் சங்கனர் பகுதியில் வசிக்கும் இவர், வீட்டில் இருந்தபடியே பால் வியாபாரம் செய்துவருகிறார்.

    இவர் பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அஜய் தேவ்கனின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அஜய் தேவ்கன் புகையிலை விளம்பரங்களில் நடிப்பதை கண்டு அவரால் கவரப்பட்டு தானும் அதனை பயன்படுத்தி வந்துள்ளார். அஜய் தேவ்கன்னை போலவே அவரது ஸ்டைலில் புகையிலை பயன்படுத்தி வந்துள்ளார்.

    இதையடுத்து தொடர்ந்து புகையிலை பயன்படுத்தவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரமான நோயால் தனக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை உணர்ந்த நானக்ராம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.



    இதனையடுத்து நானக்ராம் 1000 துண்டு பிரசுரங்களை பொது இடங்களில் விநியோகம் செய்து எப்படியாவது அஜய் தேவ்கனை இந்த செய்தி சென்றடைய வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரசுரங்களில்  ‘நீங்களும்(அஜய் தேவ்கன்) உங்கள் குடும்பத்தாரும் எத்தனை முறை புகையிலை பயன்படுத்தியிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியும் இடம் பெற்றுள்ளது. மேலும் போஸ்டர்களும் பயன்படுத்தி வருகிறார்.

    இது குறித்து அவரது மகன் தினேஷ் கூறுகையில், ‘எனது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தேவ்கன் விளம்பரத்தில் பயன்படுத்திய புகையிலையை பயன்படுத்தி வந்தார். அப்போது தேவ்கனால் ஈர்க்கப்பட்டார். இப்போது புற்றுநோயால் அவதிப்படுகிறார். இதன் காரணமாக இது போன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பொருட்களுக்கு, தனது ஹீரோவான அஜய் விளம்பரம் செய்வதை எனது தந்தை விரும்பவில்லை. எனவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்’ என கூறியுள்ளார். #AjayDevgan #FanRequests 



     





     
    விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக நடிக்கும் `இராவண கோட்டம்' படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். #RAAVANAKOTTAM #Shanthanu
    `மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக நடிக்க கயல் ஆனந்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனந்தி நடிப்பில் கடைசியாக வெளியான `பரியேறும் பெருமாள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #RAAVANAKOTTAM #Shanthanu #KayalAnandhi

    தமிழர்களுக்கு எதிராக பேசிய பிரகாஷ்ராஜ் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை தமிழ் படங்களில் நடிக்க விடமாட்டோம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். #Prakashraj
    சினிமாவில் நடித்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய டெல்லி சென்றுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, நான் தமிழன் அல்ல, கன்னடக்காரன் என்றும் தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோவது உண்மைதான் என்றும் கூறியிருக்கிறார்.



    கர்நாடகத்தில் பிறந்த பிரகாஷ்ராஜை கன்னட திரையுலகம் கைவிட்டபோது, தமிழகத்தில் வாய்ப்பு தேடினார். அப்போது பாலசந்தர் என்ற தமிழர் தான் அவருக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பிறகு 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து பொருளும், புகழும் சேர்த்தார். இவரால் பல தமிழ் இளைஞர்களுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தமிழ் படங்களில் பறிபோனது.

    தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓட்டல், கட்டிட வேலைகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தாய் தமிழகத்திலேயே பல லட்சம் தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை. உண்மை நிலை இப்படி இருக்க பிரகாஷ்ராஜ் நன்றி மறந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இதற்காக தமிழர்களிடம் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை என்றால் புதிதாக எடுக்கப்படும் தமிழ் படங்களில் பிரகாஷ்ராஜை நடிக்க விடமாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #Prakashraj #KRajan

    ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்த சஞ்சனா சிங், அடுத்ததாக கவர்ச்சியான வேடத்தில் நடிக்க இருக்கிறார். #SanjanaSingh
    ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவர் அடுத்து நடிக்கும் படம் உடுக்கை. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் கிரைம் திரில்லராக இந்த படம் உருவாகிறது. படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாலமித்ரன் கூறும்போது, ‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல நன்மைகளை கொடுத்தாலும் சில ஆபத்துகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன. இதை புதுமையான அன்பு, அதிர்ச்சி, அதிரடி, திகில் கலந்த கதையாக உருவாக்கி இருக்கிறோம். 



    ஆர்.சரவணன், எஸ்.விபின், என்பிஎம்.உமர், சோழாஸ் சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். விபின், உமர், சஞ்சனா சிங், அங்கிதா, லட்சுமி, வலினா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி நடிக்க, சொற்கோ பாடல்களை எழுதி இசை அமைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். 

    இப்படத்தில் சஞ்சனா சிங் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார்.
    ×