search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெரினா புரட்சி"

    மெரினா புரட்சி பட விவகாரத்தில் 7 நாட்களுக்குள் முடிவெடுக்க தணிக்கைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MarinaPuratchi #CensorBoard
    2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர். 

    வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்கள். 

    இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், 



    1. இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக வேண்டும்.

    2. அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில்  முடிவெடுக்க வேண்டும்.

    என உத்தரவிட்டுள்ளார். இதற்கு இப்படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
    ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்திற்கு மீண்டும் தடை விதித்துள்ளார்கள். #MarinaPuratchi
    ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை குழு படத்துக்கு அனுமதி கொடுக்காமல் மறுசீரமைப்பு குழுவுக்கு அனுப்பியது.

    தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான மறு சீரமைப்பு குழு எந்த காரணமும் சொல்லாமல் மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதித்துள்ளனர்.

    மறு சீரமைப்பு குழு மறுப்பு தெரிவித்தால் டெல்லி கோர்ட்டுக்கு சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2-வது மறு சீரமைப்பு குழுவுக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

    காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க உறுதியுடன் இருக்கிறோம் என்று திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
    எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் மெரினா புரட்சி படத்திற்கு மத்திய தணிக்கைக்குழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #MarinaPuratchi
    இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்த எம்.எஸ்.ராஜ் என்பவர் மெரினா புரட்சி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாக கொண்ட இந்த கதையில் அந்த போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை அழுத்தமான பதியப்பட்டு இருந்தது.

    ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய புலனாய்வு படமாக உருவாகி இருந்த மெரினா புரட்சி படம் தணிக்கை குழுவுக்கு சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த மத்திய தணிக்கை குழு படத்திற்கு தடை விதித்திருக்கிறது.



    இது குறித்து எம்.எஸ்.ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் ’தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது. மறுசீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும். உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்’ என்று கூறி இருக்கிறார். #MarinaPuratchi

    ×